சென்னை : தலைமைச் செயலகத்தில் மழை காரணமாக மரம் வேரோடு சாய்ந்ததில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து பெண் காவலர் கவிதா (41) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் காவலர் மத்தியில் மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இறந்த பெண் போக்குவரத்து காவலர் தண்டையார்பேட்டை காவலர் குடியிருப்பில் வசித்து வந்துள்ளார். முத்தியால்பேட்டை போக்குவரத்து காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வந்த இவர் இன்று பாதுகாப்பு பணிக்காக தலைமை செயலகத்தில் பணி ஒதுக்கியுள்ளனர். அப்போது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் இந்த அசாம்பாவிதம் நிகழ்ந்துள்ளது.
![மரம் விழுந்து பெண் காவலர் உயிரிழப்பு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/13526410_tree.jpg)
மேலும் , இந்த விபத்தில் ஒரு போக்குவரத்து காவலர் படுகாயம் அடைந்துள்ளார். இரண்டு கார்கள், இருசக்கர வாகனங்கள் சேதம் அடைந்துள்ளன. தற்போது மரத்தை அகற்றும் பணியில் தீயணைப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், உயிரிழந்த பெண் காவலர் கவிதாவின் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இரங்கல் தெரித்துள்ளார். மேலும், 10 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார்.
![உயிரிழந்த பெண் காவலர் கவிதா](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-01-treesfallen-script-7202290_02112021103948_0211f_1635829788_458.jpg)
பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கு - நாளை ஒத்திவைப்பு