சென்னை கோயம்பேடு மார்க்கெட் பகுதிக்கு கடந்த 21ஆம் தேதி வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் முதல் நிலை காவலரான முத்து கிருஷ்ணவேனி சென்றுள்ளார். அப்போது அங்கு பணிபுரிந்து கொண்டிருந்த கூலி தொழிலாளி திடீரென வலிப்பு ஏற்பட்டு, கீழே விழுந்து துடித்துக் கொண்டிருந்துள்ளார். இதனைக் கண்ட கிருஷ்ணவேனி உடனடியாக சென்று அந்த நபருக்கு முதலுதவி அளித்துள்ளார்.
முதலுதவி செய்துகொண்டே அருகிலிருந்த நபர்களை உதவிக்கு அழைத்தபோது அந்த நபர் அழுக்கான உடை அணிந்திருந்ததால் யாரும் முன்வராமல் செல்போனில் வீடியோ மட்டும் எடுத்துள்ளனர். பின்னர் அந்த நபர் மயக்கம் அடைந்ததால் முத்துவேணி பதற்றமடைந்து அருகே சென்று மருத்துவ பணியாளர்களை அழைத்து வந்து பரிசோதித்து உள்ளார். மேலும் ஆம்புலன்சிற்கு கால் செய்து வரவழைத்து அந்த நபரை தனி ஆளாக ஆம்புலன்சில் ஏற்றி சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளார். ஒரு உயிரை காப்பாற்ற தனி ஆளாக போராடிய கிருஷ்ணவேனியை அங்குள்ள பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.
இதுகுறித்து, முத்து கிருஷ்ணவேனி கூறும்போது, வலிப்பு ஏற்பட்ட கூலி தொழிலாளியின் பெயர் லட்சுமணன் எனவும், காவல்துறையில் முதலுதவி சிகிச்சை பற்றி கற்றுக்கொடுத்ததால் அதை எளிதாக செய்ய முடிந்தது என தெரிவித்தார். தற்போது லட்சுமணன் நல்ல நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், மன நிறைவுடன் இருப்பதாக அவர் கூறினார்.
சமூக வலைதளங்களில் தான் முதலுதவி அளித்த புகைப்படம் வைரலாகி வந்ததால் காவல் ஆணையர் நேரில் அழைத்து வெகுமதி அளித்து பாராட்டியதாகவும் அவர் கூறினார்.
இதையும் படிங்க:
கூடங்குளம் அணுமின் நிலைய அலுவலர் மாயம் - பணியின் போது ஏதேனும் நேர்ந்ததா?