ETV Bharat / state

‘சிறிய மருத்துவ நிறுவனங்களை முறைப்படுத்தும் கட்டணத்தை குறைக்க வேண்டும்’ - மருத்துவர்கள் சங்கம் - மருத்துவ நிறுவனம்

சிறியளவிலுள்ள ரத்தப் பரிசோதனை நிலையங்கள், மருத்துவ நிறுவனங்கள் போன்றவற்றை மருத்துவ நிறுவனங்கள் முறைப்படுத்தும் சட்டத்தின் கீழ் பதிவு செய்ய செலவிடப்படும் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம் மற்றும் பாரா மெடிக்கல் லேப் கல்வி மற்றும் நலச்சங்கம் தெரிவித்துள்ளது.

Etv Bharat மருத்துவர்கள் சங்கம்
Etv Bharat மருத்துவர்கள் சங்கம்
author img

By

Published : Sep 30, 2022, 10:39 PM IST

சென்னை: இதுகுறித்து சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம் மற்றும் பாரா மெடிக்கல் லேப் கல்வி மற்றும் நலச்சங்கம் சார்பின் பிரதிநிதிகள் தரப்பில், “தற்போது சிறிய ரத்த பரிசோதனை நிலையங்களை பதிவு செய்வதற்கு ரூபாய் 5,000 கட்டணமாக வசூல் செய்யப்படுகிறது. அதை ரூபாய் 1,000ஆக குறைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

இதை ஏற்றுக்கொண்ட மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கட்டணத்தை குறைக்கப்பதாக கடந்த மார்ச் 13ஆம் தேதியன்று, சென்னையில் நாங்கள் நடத்திய NABL விழிப்புணர்வு கூட்டத்தில் அறிவித்தார். இதற்கு நாங்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம். அமைச்சரின் அறிவிப்பை உடனடியாக நடைமுறைப்படுத்திட வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.

மருத்துவ ஆய்வகங்களில் எடுக்கப்படும் மருத்துவ கழிவுகளுக்கு, பயோ வேஸ்ட் அகற்றும் தனியார் நிறுவனங்கள் அந்தந்த பகுதிகளுக்கு ஏற்றார்போல் கட்டணங்களை நிர்ணயிக்கின்றன. பல இடங்களில் கட்டணங்கள அதிகமாக வசூலிக்கப்படுகின்றன. இதனால் சிறிய கிளினிக்கள், லேப்கள் பாதிக்கப்படுகின்றன. எனவே, இக்கட்டணங்களை தமிழ்நாடு முழுவதும் அனைத்து ஆய்வகங்களுக்கும் ஒரே சீராக நிர்ணயிக்க வேண்டும்.

இதற்கு தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும். மருத்துவக் கழிவுகளை அகற்றுவதற்கான கட்டணத்தையும் குறைத்திட வேண்டும். நகராட்சி, மாநகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகள் மூலம் மருத்துவக் கழிவுகளை அகற்றும் முறையை தமிழ்நாடு அரசு கொண்டுவர வேண்டும்.

மருந்தகங்களில் மருந்துகளை விற்பனை செய்வதற்கு மட்டுமே அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது. அவைகளுக்கு இரத்தம் மற்றும் சிறு நீர் பரிசோதனைகள் செய்திட அனுமதி இல்லை. ஆனால், பல இடங்களில் மருந்தகங்களில் ரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. இது மருத்துவ நிறுவனங்கள் முறைப்படுத்தும் சட்டத்திற்கு எதிரானது.

இதனால் சிறிய மருத்துவப் பரிசோதனை மையங்களும் பாதிக்கப்படுகின்றன. எனவே , இத்தகைய சட்டத்திறகுப் புறம்பான பரிசோதனைகளை தடுத்திட தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். லேப் டெக்னீசியன் கவுன்சிலில், பாரா மெடிக்கல் லேப் கல்வி மற்றும் நலசங்கத்திற்கும் பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும்.இச்சங்கத்தைச் சேர்ந்த ஒருவரை அக்கவுன்சில் உறுப்பினராக நியமிக்க வேண்டும். நீண்டகால கோரிக்கையான இதை தமிழ்நாடு அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.

ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் லேப் டெக்னீசியன்களிடம், அவர்களது பணி தொடர்பான வேலைகளைத் தவிர இதர வேலைகளையும் செய்திட அழுத்தம் கொடுப்பதால் பரிசோதனை முடவுகளை வழங்குவதில் காலதாமதமாகிறது. எனவே, இத்தகைய வேலைகள் வாங்குவதை கைவிட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க: கழிவுநீர் தொட்டியில் விழுந்து குழந்தைகள் உயிரிழப்பு - பேரூராட்சி செயல் அலுவலர் இடமாற்றம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.