கேரளாவைச் சேர்ந்த மாணவி ஃபாத்திமா லத்தீப் சென்னை ஐஐடியில் தற்கொலை செய்து கொண்டார். தனது தற்கொலைக்கு பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன் தான் காரணம் என அவர் தனது கைப்பேசியில் குறித்து வைத்திருக்கிறார்.
மேலும், இந்த விவகாரத்தில் இரண்டு பேராசிரியர்கள் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதனையடுத்து ஃபாத்திமா தற்கொலை வழக்கு மத்திய குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டது. அவர்கள் ஃபாத்திமாவின் தந்தையிடம் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் குற்றம்சாட்டப்பாட்டிருக்கும் மூன்று பேராசிரியர்களிடமும் ஐஐடி வளாகத்தில் நேற்று இரவு வரை, மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். இச்சூழலில் இன்றும் மூன்று பேராசிரியர்களை விசாரிக்க மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
இதையும் படிங்க:
'ஃபாத்திமா லத்தீப் சமூகத்தின் அறிவாளி' - வழக்கறிஞர் அருள்மொழி