ETV Bharat / state

பிறந்து இரண்டு மாதங்களே ஆன கைக்குழந்தையை கொன்ற கொடூரத் தந்தை - கொலை

இரண்டு மாத கைக் குழந்தையை சுவற்றில் அடித்துக்கொலை செய்த தந்தைக்கு வரும் 13ஆம் தேதி வரை நீதிமன்றக்காவல் விதிக்கப்பட்டுள்ளது.

ஆத்திரத்தில் கைக் குழந்தையை கொன்ற தந்தை
ஆத்திரத்தில் கைக் குழந்தையை கொன்ற தந்தை
author img

By

Published : Mar 31, 2023, 4:04 PM IST

சென்னை: சென்னை சோழிங்கநல்லூர் அடுத்த செம்மஞ்சேரியைச் சேர்ந்தவர், கெளசல்யா(23). இவரது கணவர் மணி(எ)ரஞ்சித் குமார்(24). இருவருக்கும் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு தான் காதல் திருமணம் ஆகியுள்ளது. திருமணம் செய்து கொள்வதற்கு முன்பே இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர். அதனால் கெளசல்யா கருவுற்றிருந்தார்.

குழந்தை பிறந்து இரண்டு மாதங்கள் ஆன நிலையில், கடந்த மாதம் குழந்தை மற்றும் கெளசல்யாவை, வீட்டிற்கு அழைத்துச் சென்று குழந்தை தன்னைப்போல் இல்லை எனக் கூறி தகராறு செய்து மனைவியை அடித்துள்ளார். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் பெண் வீட்டார் சென்று தங்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

இந்நிலையில் கௌசல்யா வீட்டிற்குச் சென்ற மணி, மனைவியை அழைத்துக் கொண்டு வீட்டிற்குள் சென்று மீண்டும் தகராறு செய்துள்ளார். அப்போது ஆத்திரத்தில் 2 மாதக் குழந்தையை துன்புறுத்தி தண்ணீரில் மூழ்க வைத்துள்ளார். பின்னர், காலை பிடித்து தூக்கி சுவற்றில் அடித்துள்ளார். அதன் காரணமாக பின்தலை, மற்றும் முதுகு நொறுங்கி குழந்தை அங்கேயே இறந்து விட்டது. ரஞ்சித் குமார் அங்கிருந்து தப்பியோடி விட்டார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்குச்சென்ற செம்மஞ்சேரி போலீசார் குழந்தையை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக இராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின் தப்பியோடிய மணி(எ) ரஞ்சித் குமாரை செம்மஞ்சேரி உதவி ஆய்வாளர் சுரேஷ் கைது செய்தார். காவல் நிலையம் அழைத்து வந்த ரஞ்சித் குமார் மீது கொலை வழக்குப்பதிவு செய்து ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதனை விசாரித்த நீதிபதிகள் ரஞ்சித் குமாரை வரும் 13ஆம் தேதி வரை சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: கொசு விரட்டியால் நேர்ந்த சோகம் - கார்பன் மோனாக்சைடு நச்சை சுவாசித்த 6 பேர் பலி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.