ETV Bharat / state

ஆதம்பாக்கம் தந்தை, மகன் தீயில் கருகி உயிரிழந்த சம்பவத்தின் அதிர்ச்சியூட்டும் தகவல்! - latest crime news

சென்னை: ஆதம்பாக்கத்தில் தந்தை, மகன் தீயில் கருகி உயிரிழந்த சம்பவத்தில், அதிர்ச்சியூட்டும் தகவலை காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஆதம்பாக்கம்
ஆதம்பாக்கம்
author img

By

Published : Dec 15, 2020, 7:46 AM IST

சென்னை ஆதம்பாக்கம் பாலாஜி நகர், 6ஆவது தெருவில் அடுக்குமாடிக் குடியிருப்பில் இரண்டாவது தளத்தில் வசித்துவருபவர் பாரி (என்கிற) பரிமளம் (47). இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்துவந்தார். இவரது மனைவி ராஜபாலம்பிகா (42), சைதாப்பேட்டையில் உள்ள ஆர்க்கிடெக் நிறுவனத்தில் வேலை பார்த்துவருகிறார். கருத்து வேறு பாடு காரணமாக, கணவரைப் பிரிந்து, ஆதம்பாக்கம், இன்கம்டாக்ஸ் காலனியில் தனியாக வசித்துவருகிறார். இவர்களது மகன் பாலமுருகன் (10), தனியார் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்துவந்தான்.

இந்நிலையில், நேற்று (டிசம்பர் 14) மாலை பரிமளம் வீட்டிலிருந்து திடீரென புகை வந்துள்ளது. இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் ஓடிச் சென்று பார்த்தபோது, வீட்டிற்குள் நெருப்பு கொளுந்துவிட்டு எரிந்துகொண்டிருப்பதைப் பார்த்துள்ளனர். தகவலறிந்து விரைந்தவந்த கிண்டி, வேளச்சேரி தீயணைப்பு வீரர்கள், தீயைக் கட்டுக்குள் கொண்டுவர முயற்சித்தனர்.

ஆனால், அதற்குள் தந்தை, மகன் இருவரும் தீயில் கருகி உயிரிழந்தனர். உடலைக் கைப்பற்றிய ஆதம்பாக்கம் காவல் துறையினர், உடற்கூராய்வுக்காக குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதையடுத்து, தடயவியல் உதவி இயக்குநர் சோபியா வரவழைக்கப்பட்டு ஆய்வுமேற்கொள்ளப்பட்டது.

இது குறித்து காவல் துறை தரப்பில், "புதுச்சேரியைச் சேர்ந்தவர் பரிமளம், கடலூரைச் சேர்ந்தவர் ராஜபாலாம்பிகா. இருவரும் ஒரே அலுவலகத்தில் வேலை பார்த்தனர். அப்போது, பழக்கம் ஏற்பட்டு இருதரப்பு வீட்டாரும் பேசி, 12 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. பரிமளம் சந்தேக புத்தி கொண்டவர். குடிப்பழக்கமும் உண்டு.

இதனால், கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடு எழுந்து கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன் இருவரும் பிரிந்து தனித்தனியாக வாழ்கின்றனர். அவர்களது மகன், காலையில் தந்தையிடமும், இரவில் தாயிடமும் வளர்ந்துவந்துள்ளார். பரிமளத்திற்குச் சரியான வேலை இல்லாதததால், மகனை சாக்காக வைத்து, மனைவியிடம் அவ்வப்போது பணம் வாங்குவது வழக்கம்.

இன்று காலை மகனை அழைத்துச் சென்ற பரிமளம், மகனை கடற்கரைக்கு அழைத்துச் செல்ல உள்ளதாக தொலைபேசி வாயிலாக கூறியுள்ளார். இந்நிலையில், இந்தச் சம்பவம் நடந்துள்ளது. பரிமளம் மகனை கொலை செய்த பின், இருவரது உடலிலும் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்து தற்கொலை செய்திருக்கலாம் என காவல் துறையினர் சந்தேகிக்கின்றனர்.

ஏனென்றால், அவர் இறப்பதற்கு முன்பு, வீட்டு உரிமையாளர் மகன் மணிகண்டன் என்பவரிடம் உறை ஒன்றை அளித்துள்ளார். அதில், தனது இறுதிச்சடங்கிற்கு, 3000 ரூபாய் உள்ளதாக கூறியுள்ளார்.

அதேபோல், அவரது இருசக்கர வாகனம், செல்போன் ஆகியவற்றையும் பக்கத்து வீட்டில் வசிப்பவருக்கு கொடுத்துள்ளார். எனவே, இது திட்டமிடப்பட்ட செயல்" எனத் திட்டவட்டமாகத் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த ஆதம்பாக்கம் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.