சென்னை: நுங்கம்பாக்கம் கதீட்ரல் கார்டன் சாலையில் உள்ள அதானி நிறுவன அலுவலகத்தை முற்றுகையிட்ட பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணியினர், மக்கள் பணத்தை கொள்ளை அடித்த அதானியை கைது செய்ய வேண்டும். அதானி குடும்பத்தின் சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும். கார்ப்பரேட்டுக்கு வங்கிகள் கடன் வாழங்குவதை நிறுத்த வேண்டும்.
அதானி குடும்பம் பங்குச்சந்தை மோசடி காரணமாக உலகமய தாராளமய தனியார் கொள்கைகளை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை முன்னிறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களை போலீசார் கைது செய்தனர். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணி தலைமை குழு உறுப்பினர் முருகன் கூறுகையில், பங்குச்சந்தையில் மோசடி செய்து மக்களின் பணத்தை அதானி குழுமம் சூறையாடி இருக்கிறது. கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை 63 பெரிய ஒப்பந்தங்களை அதானி குழுமத்திற்கு மத்திய பாஜக அரசு வழங்கியிருக்கிறது. எஸ்பிஐ, எல்ஐசி போன்ற பொது நிறுவனம் மூலம் அதானிக்கு கடனாக வழங்கியுள்ளது.
ஹிண்டர்பெர்க் அறிக்கை வெளியான பின்னரும் கார்ப்பரேட்டுகளை காப்பாற்றவே மத்திய பாஜக அரசு சமீபத்திய பட்ஜெட்டில் 10 லட்சம் கோடி ஒதுக்கி இருக்கிறது . பல மோசடி நடந்துள்ளது என்று தெரிந்து ஒரு மாதம் கழித்து இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை. 10 ஆண்டுகளாக இந்திய சொத்துக்களை மோடி அரசு சூறை ஆடி வருகிறது.
தமிழ்நாட்டில் தமிழக அரசு 33 ஒப்பந்தங்கள் அதானி நிறுவனத்துடன் போடப்பட்டுள்ளது. இதை உடனடியாக திரும்ப பெற வேண்டும். இந்த மோசடியை பெரிய விவதாக பொருளாக கொண்டு வரவேண்டும். போலி அலுவலகம் மூலம் அதானி பல லட்சம் கோடி மோசடி செய்துள்ளார். திட்டமிட்டு செய்யப்பட்டவை சர்வாதிகார ஆட்சி செய்ய வேண்டும் என்பதற்காக ராகுல் காந்தி மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என தெரிவித்தார்.
வரும் 27ஆம் தேதி சென்னை மாநகராட்சி பட்ஜெட் தாக்கல்.. சமூக ஆர்வலர்கள் கோரிக்கை என்ன.?