ETV Bharat / state

வேளாண் சட்டத்துக்கு எதிராக மாநிலம் முழுவதும் விவசாயிகள் கருத்தரங்கு - பி.ஆர். பாண்டியன் - விவசாயிகள் ஒருகிணைப்பு சங்கத் தலைவர் பி.ஆர். பாண்டியன்

சென்னை: வேளாண் சட்டத்துக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் ஐந்து மண்டலங்களாக பிரித்து வணிகர் சங்க விவசாயிகள் இணைந்து கருத்தரங்கம் நடத்த திட்டமிட்டுள்ளதாக விவசாயிகள் ஒருங்கிணைப்பு சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.

வேளாண் சட்டத்துக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் விவசாயிகள் கருத்தரங்கம் - பி.ஆர்.பாண்டியன்

author img

By

Published : Oct 24, 2020, 4:22 PM IST

விவசாயிகள் ஒருகிணைப்பு சங்கத் தலைவர் பி.ஆர். பாண்டியன், வணிகர் சங்கங்களின் பேரமைப்புத் தலைவர் விக்ரமராஜாவுடன் இணைந்து சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "கோயம்பேடு காய்கறி சந்தை மூடப்பட்டுள்ளதால் சிறு வியாபாரிகள் மட்டுமின்றி விவசாயிகளும் பாதிக்கப்படுகிறார்கள். ஏராளமான பச்சை காய்கறிகள் எடுத்துச் செல்லப்படாமல் அழுகி வருகிறது. ஒரு பகுதி கடைகள் திறக்கப்பட்டாலும் அது எந்தப் பயனும் அளிக்கவில்லை.

விவசாயிகள், வணிகர்களின் நலன் கருதி கோயம்பேடு காய்கறி சந்தையை முழுமையாக திறக்க முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். பண்டிகை காலம் நெருங்குகிறது. ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகை வருகிறது. சந்தை திறக்கப்படாமல் மக்கள் சிரமங்களை சந்திப்பது ஒருபுறம் என்றால் விளைப்பொருள்கள் அழிந்து வீணாவது மற்றொருபுறம் நடந்து வருகிறது. இதனை தடுக்க வேண்டும்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்கள் வணிகர்களையும் விவசாயிகளையும் அழிக்கும் சட்டம். நாட்டிலேயே முதல்முறையாக தமிழ்நாட்டில்தான் இரட்டை கொள்முதல் முறை அமலில் உள்ளது. விவசாயிகளிடமிருந்து அரசும் கொள்முதல் செய்யும், நிறுவனங்களும் கொள்முதல் செய்யும். எதில் எங்கு அதிக லாபம் கிடைக்கிறதோ விவசாயிகள் அங்கு விற்பனை செய்வார்கள். இதனை முடக்கும் வகையில் மத்திய அரசின் சட்டம் அமைந்துள்ளது.

வேளாண் சட்டத்துக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் ஐந்து மண்டலங்களாக பிரித்து வணிகர் சங்கங்கள், விவசாயிகள் இணைந்து கருத்தரங்கம் நடத்தப்படும். இதன் பாதிப்புகளை ஆட்சியாளர்கள் கவனத்துக்கு கொண்டு சென்று மாற்றம் கொண்டுவர வேண்டும் என்ற அடிப்படையில்தான் இந்த கருத்தரங்கம் நடைபெறும். எங்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் மாற்றம் செய்யப்பட்டால் இதனை ஏற்க தயாராக இருக்கிறோம்" என்று கூறினார்.

இதையும் படிங்க:மோடி அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து பேரணி - கே.எஸ்.அழகிரி வலுக்கட்டாயமாகக் கைது!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.