ETV Bharat / state

விவசாயிகளுக்கு மேலும் ஒரு மாதம் சலுகைகள் நீட்டிப்பு

author img

By

Published : Apr 26, 2020, 11:45 AM IST

Updated : Apr 26, 2020, 1:06 PM IST

சென்னை: விவசாயிகளுக்கு சலுகைகள் மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

சலுகைகள் மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு
சலுகைகள் மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு

விவசாய விளைபொருட்களை பாதுகாத்து வைப்பதற்கும், அவற்றின் மீது கடன் பெறுவதற்குமான சலுகைகளை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கரோனா பாதிப்பால் விளைபொருட்களை விற்பனைக்கு எடுத்துச் செல்வதிலுள்ள பிரச்னைகளைப் போக்கிட அரசு உரிய நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.

விவசாயிகள் விளைபொருட்களை அரசு கிடங்குகளில் 180 நாட்கள் வரை வைத்து பாதுகாத்திடலாம். அதிக விலை கிடைக்கப்பெறும் காலங்களில், விளைபொருட்களை கிடங்கிலிருந்து எடுத்து விற்பனை செய்யலாம். மேலும் காய்கறிகள் மற்றும் பழங்களை குளிர்பதனக் கிடங்குகளில் பாதுகாப்பதற்கான கட்டணம் முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

தற்போது நெல், சிறு தானியங்கள், பயறு வகைகள், நிலக்கடலை, எள், தேங்காய், பருத்தி, வெங்காயம், மிளகாய், புளி, முந்திரி, வெல்லம், மரவள்ளி மற்றும் சில மாவட்டங்களில் பழங்கள், காய்கறிகள் உள்ளிட்ட விளைபொருட்களை விவசாயிகள் விற்பனை செய்யும்போது, வியாபாரிகளிடமிருந்து விற்பனை மதிப்பில் 1 விழுக்காடு சந்தைக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

தற்போது நிலவிவரும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் விளைபொருட்களை நியாயமான விலையில் பொதுமக்களுக்கு விநியோகம் செய்வதற்காக , வியாபாரிகள் செலுத்தும் 1 விழுக்காடு சந்தைக் கட்டணம் ஏப்ரல் 30ஆம் தேதிவரை ரத்து செய்யப்பட்டிருந்தது. இந்தச் சலுகை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீட்டிக்கப்படுகிறது" எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையும் படிங்க: குடும்ப அட்டைதாரர்களுக்கு 98 விழுக்காடு ரூ. 1000 வழங்கப்பட்டுள்ளது - முதலமைச்சர்

Last Updated : Apr 26, 2020, 1:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.