மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள பெருமாள்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் வடிவேலு. விவசாயி. இவர், வயல்வெளியில் சுற்றித் திரிந்த பாம்பு ஒன்றை பிடித்து, கரோனா நோய்க்கு இது அரிய மருந்து எனக் கூறிக் கொண்டே அதனை உயிருடன் வாயில் வைத்து கடித்துச் சாப்பிடுகிறார்.
அதனை மற்றொரு நபர் வீடியோவாக எடுக்க, 'கரோனாவுக்காக இந்தப் பாம்பை நான் கடித்து தின்னுகிறேன்' எனக் கூறிக் கொண்டே பாம்பினை கடித்து தின்னிகிறார். தற்போது, இந்தக் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.