ஒன்றிய அரசின் உணவு மற்றும் பொது விநியோகத் திட்டத்துறை நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் உழவர் பெருமக்கள் பயன் பெறுவதை உறுதி செய்யும் பொருட்டு இணைய வழி பதிவு முறையை இந்த மாதம் ஒன்றாம் முதல் செயல்படுத்த கேட்டுக்கொண்டுள்ளது.
அதனடிப்படையில், www.tncsc.tn.gov.in மற்றும் www.tncsc-edpc.in ஆகிய இணைய முகவரி மூலம் நெல் நேரடி கொள்முதல் செய்யப்படும் என்று தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் தெரிவித்திருந்தது. தங்களைக் கலந்து பேசாமல் இந்த திட்டம் அறிவித்ததற்கு விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது.
-
மாண்புமிகு முதல்வர் அவர்களது உத்தரவுப்படி, சன்ன ரக நெல் 100 ரூபாய் உயர்த்தி 2060 ரூபாய்க்கும், பொது ரக நெல் 75 ரூபாய் உயர்த்தி 2015 ரூபாய்க்கும் அக்டோபர் 1 முதல் கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றது. pic.twitter.com/mO9GUngcXz
— R.SAKKARAPANI (@r_sakkarapani) October 5, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">மாண்புமிகு முதல்வர் அவர்களது உத்தரவுப்படி, சன்ன ரக நெல் 100 ரூபாய் உயர்த்தி 2060 ரூபாய்க்கும், பொது ரக நெல் 75 ரூபாய் உயர்த்தி 2015 ரூபாய்க்கும் அக்டோபர் 1 முதல் கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றது. pic.twitter.com/mO9GUngcXz
— R.SAKKARAPANI (@r_sakkarapani) October 5, 2021மாண்புமிகு முதல்வர் அவர்களது உத்தரவுப்படி, சன்ன ரக நெல் 100 ரூபாய் உயர்த்தி 2060 ரூபாய்க்கும், பொது ரக நெல் 75 ரூபாய் உயர்த்தி 2015 ரூபாய்க்கும் அக்டோபர் 1 முதல் கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றது. pic.twitter.com/mO9GUngcXz
— R.SAKKARAPANI (@r_sakkarapani) October 5, 2021
இந்நிலையில் இதுகுறித்து உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தனது ட்விட்டர் பக்கத்தில், "அறுவடை காலம் என்பதைக் கருத்தில் கொண்டு, நேரடி கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளுக்கு எவ்வித இடையூறும் இன்றி நெல் கொள்முதல் செய்ய முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். ஆகையால், ஆன்லைன் பதிவு குறித்த ஒன்றிய அரசின் உத்தரவு பற்றி விவசாயிகள் அச்சப்பட தேவையில்லை" என குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: நடமாடும் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க முதலமைச்சர் உத்தரவு!