ETV Bharat / state

கூட்டுறவு சங்கங்களில் தரமற்ற உரங்களை வாங்க வற்புறுத்தல்? - பாஜக விவசாய பிரிவு பொது செயலாளர் புகார்

author img

By

Published : Jul 27, 2022, 5:13 PM IST

கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகளுக்கு தரமற்ற உரங்கள் விற்பனை செய்யப்படுவதாக கூட்டுறவுத்துறை செயலாளர், வேளாண் துறை செயலாளர் ஆகியோரிடம் பாஜக விவசாய பிரிவு பொது செயலாளர் புகார் அளித்துள்ளார்.

கூட்டுறவு சங்கங்களில் தரமற்ற உரங்களை வாங்க வற்புறுத்துவதாக விவசாயிகள் புகார்

சென்னை: தலைமைச் செயலகத்தில் பாஜக விவசாய பிரிவு மாநில பொதுச் செயலாளர் ரவிச்சந்திரன் மற்றும் பிரவீன்குமார் ஆகியோர் கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகளுக்கு தரமற்ற உரங்கள் விற்பனை செய்யப்படுவதாகவும், தரமற்ற உரங்களை வாங்க வற்புறுத்துவதாகவும் கூட்டுறவுத்துறை செயலாளர், வேளாண் துறை செயலாளரிடம் நேரில் புகார் அளித்தனர்.

பின்னர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த அவர்கள், தமிழ்நாட்டில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெறக்கூடிய கடன்களில் 30 சதவீதம் இயற்கை உரங்களை விவசாயிகள் வாங்கி செல்கின்றனர். தற்போது இத்தகைய இயற்கை உரங்கள் அதிக விலையில் விற்பனை செய்யப்படுவதாகவும் மேலும் தரமற்ற நிலையில் இருப்பதாகவும் தெரிவித்தனர்.

இத்தகைய உரத்தில் இடம்பெற்றிருக்கக்கூடிய உள்ளீடு பொருட்கள் குறித்த எவ்வித விவரமும் இல்லை எனவும் மேலும் இத்தகைய உரங்கள் மத்திய மாநில அரசுகளின் சான்றிதழ் பெற்றதற்கான தகவல்கள் எதுவும் இல்லை என குற்றம் சாட்டினர். இத்தகைய உரங்களை கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகளை வாங்க கட்டாயப்படுத்துவதன் காரணமாக விவசாயிகளின் விளைச்சல் பாதிக்கப்படுவதாக தெரிவித்தனர்.

மத்திய மாநில அரசுகளின் சான்றிதழ் இல்லாத உரங்கள் கூட்டுறவு வங்கி அதிகாரிகளால் விவசாயிகளுக்கு கட்டாயப்படுத்தப்பட்டு வழங்குவதாகவும் இதில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாகவும் தெரிவித்தனர். இது தொடர்பாக கூட்டுறவுத் துறை செயலாளர் மற்றும் வேளாண் துறை செயலாளர் ஆகியரிடம் மனு அளித்திருப்பதாகவும் இவற்றை விரைந்து தலையிட்டு நடவடிக்கை எடுக்கவில்லை எனில் அடுத்த கட்டமாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கவனத்திற்கு எடுத்துச் சென்று போராட்டம் நடத்தப்படும் எனவும் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:கபடி களத்தில் உயிரிழந்த இளைஞர் - ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கிய முதலமைச்சர் ஸ்டாலின்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.