ETV Bharat / state

இந்தியா - ஆஸி., 3வது ஒருநாள் போட்டி: சேப்பாக்கத்தில் டிக்கெட் வாங்க இரவு முதலே காத்திருக்கும் ரசிகர்கள்!

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி வரும் 22-ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ள நிலையில் நள்ளிரவு முதலே டிக்கெட் வாங்க ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Mar 18, 2023, 9:28 AM IST

சென்னை: சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ சிதம்பரம் விளையாட்டு மைதானத்தில் ரூ.139 கோடி செலவில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வந்தது. கூடுதலாக ஐந்தாயிரம் இருக்கைகளுடன் புதிய கேலரி அமைக்கப்பட்டுள்ளது. இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமையன்று திறந்து வைத்தார்.

இந்நிலையில் வரும் 22-ஆம் தேதி இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-ஆவது ஒருநாள் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதற்கான நேரடி டிக்கெட் முன்பதிவு சனிக்கிழமை காலை 11 மணிக்கு தொடங்குகிறது. பார்வையாளர் ஒருவருக்குக் குறைந்தபட்சமாக ரூ.1,200 நிர்ணயம் செய்து தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.

இந்த டிக்கெட்டுகளை வாங்க நள்ளிரவு முதலே கிரிக்கெட் ரசிகர்கள் சேப்பாக்கம் மைதானத்தில் காத்திருக்கின்றனர். ஒரு சில ரசிகர்கள் நீண்ட வரிசையில் சுமார் 10 மணிநேரத்திற்கும் மேலாக நிற்க முடியாமல் அங்கேயே அமர்ந்தபடி உறங்கினர். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை மைதானத்தில் கிரிக்கெட் போட்டி நடைபெறுவதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இதையும் படிங்க: Ind Vs Aus: ராகுல், ஜடேஜா அபார பேட்டிங்கில் இந்தியா வெற்றி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.