சென்னை ஓட்டேரி எஸ்.எஸ். புரம் குடிசைமாற்று வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி மதன் (30). இவர் மீது ஓட்டேரி, புளியந்தோப்பு ஆகிய காவல் நிலையங்களில் கொலை முயற்சி, வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில் ஓட்டேரி பாஷியம் ரெட்டி தெரு அருகே மதன் வந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள், அவரை வழிமறித்து வெட்டிக்கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
இதில் சம்பவ இடத்திலேயே மதன் உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்து வந்த காவல் துறையினர் மதனின் உடலை மீட்டு உடற்கூராய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
முதற்கட்ட விசாரணையில் முன்விரோதம் காரணமாகக் கொலை நடந்தது தெரியவந்தது. தற்போது தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளைக் காவல் துறையினர் தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க: சங்கரன்கோவில் அருகே ஒருவர் அடித்துக் கொலை!