சென்னை தண்டையார்பேட்டை நேதாஜி நகர் இரண்டாவது தெருவைச் சேர்ந்தவர் செல்வகுமார் என்கிற கட்ட குமார். பிரபல கஞ்சா வியாபாரியான, இவர் கடந்த 2018ஆம் ஆண்டு கஞ்சா விற்பனை ஈடுபட்டிருந்தபோது தண்டையார்பேட்டை காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்.
இன்று (நவ.4) இந்த வழக்கை விசாரித்த கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி தேன்மொழி குற்ற வழக்கில் தொடர்புடைய கட்ட குமாருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ. 20 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
பின்னர் அவரை காவல் துறையினர் பாதுகாப்போடு அழைத்துச் சென்று புழல் சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: கஞ்சா விற்பனை செய்து வந்த தாய், மகன் கைது!