ETV Bharat / state

ஹார்வர்டு பல்கலைக்கழக சீட்டிற்கு ரூ.58 லட்சம். மோசடியில் ஈடுபட்ட 4 பேர் கைது! - Latest Chennai News

சென்னை: ஹார்வார்டு பல்கலைக்கழக கல்லூரியில் படிக்க சீட்டு வாங்கி தருவதாக மோசடியில் ஈடுபட்ட தாய், தந்தை, மகள் உள்பட 4 பேர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

family-arrested-for-harvard-university-seat-scam

author img

By

Published : Sep 9, 2020, 12:16 PM IST

சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள கல்லூரி சாலையில் வசிக்கும் சுனில் குமார் ஹாண்டா (52) என்பவரின் மகன் தனப் ஹாண்டா. இவருக்கு அமெரிக்காவின் கேம்பிரிட்ஜ் மாகாணத்தில் உள்ள ஹார்வார்டு பல்கலைக்கழக கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பதற்கு இடம் வாங்கித் தருவதாக, 2018ஆம் ஆண்டு சுனில் குமார் ஹாண்டாவிற்கு தெரிந்த ராஜசேகரன் என்பவர் கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து ராஜசேகர் என்பவர் அக்‌ஷயா அஸ்வந்தி, அவரது தந்தை செம்பையா விஸ்வநாதன், அவரது தாய் தர்சினி ஆகியோரையும் அறிமுகப்படுத்தியுள்ளார். அப்போது அக்‌ஷயா அஸ்வந்தி என்பவர் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் ஜர்னலிசம் படித்து வருவதாக கூறியுள்ளார்.

இதனை நம்பி சுனில் குமார் ஹாண்டா தனது மகனுக்கு ஹார்வார்டு பல்கலைக்கழக கல்லூரியில் சீட்டு வாங்கித்தருவதற்காக அவர்களிடம் 58 லட்சத்து 40 ஆயிரத்து 800 ரூபாய் கொடுத்துள்ளார். ஆனால் அவர்கள் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பெயரில் போலியான ரசீதுகளை தயாரித்து கொடுத்து ஏமாற்றியுள்ளனர்.

இதுகுறித்து சுனில்குமார் ஹாண்டா சென்னை பெருநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வாலிடம் புகார் கொடுத்தார். இதைப்பற்றி விசாரணை நடத்தும்படி மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினருக்கு உத்தவிடப்பட்டது. அதன்படி மத்தி குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

பின்னர் மத்தியக் குற்றப்பிரிவு ஆவண மோசடி தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் ராஜா ராபர்ட் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை காவலர்கள் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை செய்து வழக்கில் சம்பந்தப்பட்ட கொரட்டூரைச் சேர்ந்த அக்‌ஷயாஅஸ்வந்தி (21), அவரது தந்தை செம்பையா விஸ்வநாதன் (51), தாயார் தர்சினி(47), மற்றும் வானகரத்தைச் ராஜசேகரன் (42) ஆகிய 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: கேரள தங்கக் கடத்தல் வழக்கு: நகைப் பட்டறை உரிமையாளர் வீட்டில் என்.ஐ.ஏ சோதனை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.