ETV Bharat / state

போலி பாஸ்போர்ட் வழக்கில் புதுச்சேரி பெண்ணை தேடும் சென்னை போலீஸ் - Two women with fake passport

போலி பாஸ்போர்ட் தயாரித்து தாயும், மகளும் இலங்கை செல்ல முயன்ற வழக்கு தொடர்பாக புதுச்சேரி பெண்ணை சென்னை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

போலி பாஸ்போர்ட் வழக்கில் புதுச்சேரி பெண்ணை தேடும் சென்னை போலீஸ்

author img

By

Published : Dec 23, 2022, 7:07 AM IST

சென்னையில் இருந்து போலி பாஸ்போர்ட்களில், இலங்கையின் யாழ்ப்பாணம் நகருக்கு செல்ல முயன்ற 2 இலங்கை பெண்களை கடந்த வாரம் சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் பிடித்தனர். இதையடுத்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இதுதொடர்பான விசாரணையில், இருவரும் தாய், மகள் என்பது தெரிய வந்தது.

கங்கா என்கிற கங்கேஸ்வரி, அவரது மகள் ஸ்வர்ஜலா இருவரும் இலங்கை யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்டவர்கள். கடந்த 2007ஆம் ஆண்டு இலங்கையில் இருந்து கங்கா, அவரது கணவர் சுந்தரதாச குருக்கள் மகள் ஸ்வர்ஜலா குடும்பத்துடன் சென்னை வந்து சென்னை ஆலப்பாக்கம் மெட்ரோ நகரில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர்.

2013ஆம் ஆண்டு சுந்தரதாச குருக்கள் உயிரிழந்தவிட, தாய்-மகள் இருவரும் இங்கு வசித்து வந்துள்ளனர். கங்கா பியூட்டிஷியன் தொழிலை மேற்கொண்டு வந்துள்ளார். அவரது மகள் திருவேற்காட்டில் உள்ள தனியார் கல்லூரியில் பொறியியல் படித்துவிட்டு வேலை தேடி வந்துள்ளார். 2017ஆம் ஆண்டுக்கு பிறகு இருவரது பாஸ்போர்ட்டும் காலாவதியாகிவிட 5 வருடங்களுக்கும் மேல் சட்டவிரோதமாக இந்தியாவில் தங்கி வந்த இருவரும், இலங்கையில் உள்ள உறவினர்களை பார்ப்பதற்கு செல்ல திட்டமிட்டனர்.

ஆனால், பாஸ்போர்ட் காலாவதியான பிறகும் தொடர்ந்து தங்கி இருந்ததால், அதற்காக தலா 1.50 லட்சம் அபராதம் செலுத்த நேரிடுவதோடு சட்ட நடவடிக்கைக்கும் ஆளாக நேரிடும் என்பதால் புதுச்சேரியை சேர்ந்த பெண் ஒருவர் மூலம் இந்திய குடிமக்கள் போன்று பாஸ்போர்ட்டை தயாரித்துள்ளனர்.

சென்னையில் தங்கியிருந்த முகவரியின் பெயரில் ஆதார் அட்டை வாக்காளர், அடையாள அட்டை ஆகியவற்றை பெற்று அதன் மூலம் இந்திய பாஸ்போர்ட்டை வாங்கியுள்ளனர் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இப்போது தாய் - மகள் இருவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், இவர்களுக்கு பாஸ்போர்ட் ஒன்றிற்கு 12 ஆயிரம் செலவில் போலியாக பாஸ்போர்ட் எடுக்க உதவிய புதுச்சேரியை சேர்ந்த பெண்ணை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறை: விமான கட்டணம் உயர்வு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.