ETV Bharat / state

சென்னையில் ரூ.10 லட்சம் மோசடி செய்த போலி என்ஐஏ அதிகாரி கைது! - சென்னை மாவட்ட செய்தி

சென்னையில் வங்கியில் கடன் பெற்று தருவதாக கூறி 10 லட்சம் ரூபாய் மோசடி செய்த போலி என்ஐஏ அதிகாரியை போலீசார் கைது செய்துள்ளனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Apr 29, 2023, 1:20 PM IST

சென்னை: ராமாபுரம் வெங்கடேஷ்வரா நகரை சேர்ந்தவர் விஜயகுமார்(42). இவர் பெயிண்டிங் ஒப்பந்ததாரர் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த 2016ஆம் ஆண்டு விஜயகுமாருக்கு அவரது நண்பர் மூலமாக கே.கே நகர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பாலாஜி(60) மற்றும் அவரது மகன் கோபாலகிருஷ்ணன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

மேலும் பாலாஜி தான் பொருளாதார குற்றப்பிரிவில் துணை கண்காணிப்பாளராக பணிபுரிந்து வருவதாகவும் விஜயகுமாரிடம் அடையாள அட்டையை காண்பித்துள்ளார். அவர் கூறியதை நம்பிய விஜயகுமார் தனது தொழிலை விரிவுபடுத்த வங்கியில் கடன் பெற்று தருமாறு கேட்டுள்ளார். அதற்கு பாலாஜி தனக்கு வங்கி அதிகாரிகள் தெரியும் என்றும், வங்கியில் கடன் வாங்க பணம் செலவாகும் என கூறியுள்ளார்.

இதற்கு ஒப்புதல் தெரிவித்த விஜயகுமார் கடந்த 2016ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரை சிறுக சிறுக சேர்த்த 10 லட்சம் ரூபாயை பாலாஜிக்கு கொடுத்துள்ளார். பணத்தை பெற்று கொண்ட பாலாஜி குறிப்பிட்டது போல் எந்த வங்கியிலும் கடன் வாங்கி தராமல் ஏமாற்றி வந்துள்ளார்.

இந்த நிலையில் என்.ஐ.ஏ சீக்ரெட் ஏஜெண்டாக டெல்லியில் பணிபுரிய பாலாஜி செல்வதாக விஜயகுமாரிடம் கூறியதால், பணத்தை திருப்பி கொடுக்குமாறு விஜயகுமார் கேட்டுள்ளார். அதற்கு பணம் திருப்பி தர முடியாது எனவும் இது குறித்து வெளியே கூறினால் துப்பாக்கியால் சுட்டு விடுவேன் எனவும் மிரட்டி உள்ளார்.

இதனால் பாதிக்கப்பட்ட விஜயகுமார் பாலாஜி மீது ராமாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அப்புகாரின் பேரில் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் மன உளைச்சல் அடைந்த விஜயகுமார், கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மீண்டும் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

விஜயகுமார் புகாரின் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு ஆணையர் அலுவலகத்தில் இருந்து புகார் மனு ராமாபுரம் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனையடுத்து ராமாபுரம் போலீசார் விஜயகுமார் புகாரின் பேரில் விசாரணை நடத்தி லோன் வாங்கி தருவதாக கூறி 10 லட்ச ரூபாய் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்ட பாலாஜி(60) என்பவரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட பாலாஜி பொருளாதார குற்றப்பிரிவு போலி அடையாள அட்டையை காட்டி விஜயகுமாரை ஏமாற்றி இருப்பதும் விசாரணையில் தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் பாலாஜியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: எங்கே செல்லும் இந்த பாதை.. சென்னையில் தானியங்கி மது விற்பனை இயந்திரம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.