சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால், மாதவரம் உதவி ஆணையர் அருள் சந்தோஷ்முத்து, தண்டையார்பேட்டை உதவி ஆணையர் ஜூலியஸ் சீசர், மத்திய குற்றப்பிரிவு முன்னாள் உதவி ஆணையர் ராஜேந்திரன் உள்ளிட்ட காவல்துறை உயர் அலுவலர்களின் பெயரில் போலியாக ஃபேஸ்புக் கணக்கு தொடங்கப்பட்டு அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவது கண்டறியப்பட்டது. இது குறித்து சைபர் கிரைம் காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது கூடுதல் ஆணையர் தினகரன் பெயரில் போலியாக ஃபேஸ்புக் கணக்கு தொடங்கப்பட்டு, அவர் உதவி கேட்பது போல் பேசி பணம் பறிக்கும் செயலில் சில சமூக விரோதிகள் ஈடுபட்டு வருவது தெரியவந்துள்ளது.
இதைக் கண்ட உடனே கூடுதல் ஆணையர் அலுவலகத்தில் எழுத்தாளராக பணிபுரிந்து வரும் மார்ட்டின் விக்ரம் என்பவர் வேப்பேரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் நபர்களை கண்டறியும் பணிகளில் சைபர் கிரைம் காவலர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: விஷம் கொடுக்கப்பட்ட ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் உடல் நிலையில் முன்னேற்றம்