12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான விடைத்தாள் திருத்தும் பணிகள் நேற்று சென்னை நீங்கலாக மற்ற மாவட்டங்களில் தொடங்கியது. இதில் வேதியியல் தேர்வில் புரதங்கள் மற்றும் குளோபுலார் புரதங்கள் என்ற தலைப்பில் 31ஆவது கேள்வி தவறுதலாக கேட்கப்பட்டுள்ளது.
இந்தக் கேள்விக்கு மாணவர்கள் பதிலளித்திருந்தால் அவர்களுக்கு 3 மதிப்பெண்கள் கூடுதலாக வழங்க வேண்டும் என விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கு தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. மொழிபெயர்ப்பில் பிழை இருந்ததால் அந்தக் கேள்விக்கு கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: விடைத்தாள் திருத்தும் பணி: மருத்துவ பரிசோதனைக்கு பிறகு அனுமதிக்கப்பட்ட ஆசிரியர்கள்