ETV Bharat / state

"மனோஜ் பாண்டியன் கட்சி உறுப்பினரே இல்லை": எடப்பாடி பழனிசாமி பதில் மனு தாக்கல்! - அபராதத்துடன் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்

அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் மனோஜ் பாண்டியன் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ள நிலையில், அவர் அதிமுக உறுப்பினரே இல்லை என எடப்பாடி பழனிசாமி பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி பதில் மனு
எடப்பாடி பழனிசாமி பதில் மனு
author img

By

Published : Mar 16, 2023, 4:27 PM IST

சென்னை: கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை 11-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை கலைத்து, பொதுச்செயலாளர் பதவியை மீண்டும் கொண்டு வருவது, இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை நியமிப்பது எனவும், ஓ. பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர் உள்ளிட்டோரை கட்சியில் இருந்து நீக்கியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதை எதிர்த்து, ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் மனோஜ் பாண்டியன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமி பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், "கட்சியை தற்போது இடைக்கால பொதுச்செயலாளரே பிரதிநிதித்துவப்படுத்தும் நிலையில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என, இந்த வழக்கில் பிரதிவாதிகள் தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கை தாக்கல் செய்திருக்கும் மனோஜ் பாண்டியன், தற்போது கட்சியின் உறுப்பினரே அல்ல. கடந்த 2022 ஜூன் 23-ம் தேதி பொதுக்குழு கூட்டத்துக்கு முன், ஜூன் 14-ம் தேதி நான்கு மணி நேரம் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், கட்சி மீண்டும் ஒற்றைத் தலைமைக்கு மாற வேண்டும் என அனைத்து மாவட்டச் செயலாளர்களும் விருப்பம் தெரிவித்தனர்.

கடந்த ஆண்டு ஜூலை 11-ம் தேதி நடந்த பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் தேர்தல் ஆணையத்துக்கு தெரிவிக்கப்பட்டது. அதன்படி, என்னை இடைக்கால பொதுச்செயலாளராக தேர்தல் ஆணையமும் பதிவு செய்து கொண்டது. கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் என்ற அடிப்படையில் சட்ட ஆணையம் எனக்கு கடிதம் எழுதி உள்ளது. அதே அடிப்படையில் ஜி-20 மாநாட்டுக்கு எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

கலைக்கப்பட்ட பொதுச்செயலாளர் பதவியை மீண்டும் கொண்டு வருவதும், மீண்டும் ஒற்றைத் தலைமைக்கு மாறுவதும் தொண்டர்கள் மற்றும் பொதுக்குழுவின் விருப்பத்துக்கு உட்பட்டது. வழக்கமாக, தனிப்பட்ட சங்க விவகாரங்களில் நீதிமன்றங்கள் தலையிடாது என்பதால், உள்கட்சி விவகாரங்களில் இந்நீதிமன்றம் தலையிடும்படி மனுதாரர் உரிமை கோர முடியாது. கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் மனுதாரர் உள்ளிட்டோர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். கட்சி விதிகளில் திருத்தங்கள் செய்ய பொதுக்குழுவுக்கு மட்டுமே உள்ள அதிகாரம் குறித்து, மனுதாரர் கேள்வி எழுப்ப முடியாது.

கட்சியின் பொதுக்குழு நடந்து கொண்டிருந்த போது கட்சி அலுவலகத்தை தாக்கிய மனுதாரருக்கு பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து வழக்குத் தொடர எந்தவித அடிப்படை உரிமையும் இல்லை. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து செயல்பட முடியாது என்ற வாதத்தை நீதிமன்றங்கள் உறுதி செய்துள்ள நிலையில், கட்சியில் இருந்து தன்னை நீக்க அவர்களுக்கு தான் அதிகாரம் உள்ளது என மனுதாரர் எப்படி கூற முடியும்? கட்சி விதிகள் திருத்தம், இடைக்கால பொதுச்செயலாளர் தேர்வு குறித்த தீர்மானங்களால் மனுதாரர் எந்த பாதிப்புக்கும் ஆளாகவில்லை என்பதால் எந்த நிவாரணமும் கோர முடியாது. பொதுக்குழு தீர்மானங்கள் அமலுக்கு வந்து 8 மாதங்களுக்குப் பின் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கு செல்லாததாகி விட்டது. எனவே வழக்கை அதிக அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும்" எனக் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு நாளை (மார்ச் 17) விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ''நீ கொஞ்சம் வாயை மூடு'' மீண்டும் சர்ச்சையில் சிக்கிய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.