ETV Bharat / state

”கூட்டுக் குடும்பமாக வாழ எஸ்பிபி ரொம்ப விரும்பினார்” - எஸ்பிபி சகோதரர் சிவக்குமார் உருக்கம்!

பாடகர் எஸ்பிபியின் மிகப்பெரிய ஆசை கூட்டுக் குடும்பமாக வாழ வேண்டும் என்பதுதான். ஆனால் அது இப்போதுவரை நிறைவேறவில்லை என அவரது சகோதரர் சிவக்குமார் மனம் வருத்தம் தெரிவித்துள்ளார்.

எஸ்பிபி
எஸ்பிபி
author img

By

Published : Aug 24, 2020, 7:12 PM IST

ஆந்திரப் பிரதேசம், நெல்லூர் மாவட்டம், கொகேணட்டாம்பேட்டைதான் பாடகர் எஸ்.பி.பி பாலசுப்பிரமணியம் பிறந்த ஊர். இந்தக் கிராமத்தில் சாம்பமூர்த்தி-சகுந்தலா தம்பதியருக்கு தலைமகனாக 1946ஆம் ஆண்டு எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பிறந்தார். இவர்களின் குலதெய்வம் முருகன் என்பதால் இவருக்கு பாலசுப்பிரமணியம் எனப் பெயரிடப்பட்டது.

தொடக்கக் கல்வியை நகரியில் படித்த இவர், தனது மேல்நிலை படிப்பைக் காளாஸ்திரியில் முடித்தார். இதனையடுத்து, தனது பொறியியல் பட்டப் படிப்பை அனந்தபூரில் தொடங்கினார். சில தவிர்க்க முடியாத காரணங்களால் அங்கு படிப்பைத் தொடர முடியாததால், 1969ஆம் ஆண்டு தனது கல்லூரி படிப்பிற்காக சென்னை வந்தார். இவருடைய திரையுலக இசைப்பயணம் குறித்து ஈடிவி பாரத் சார்பில் அவருடைய சகோதரர் சிவக்குமாரிடம் கேட்டோம்.

குடும்பத்துடன் எஸ்பிபி
குடும்பத்துடன் எஸ்பிபி

”கோடம்பாக்கம் மீனாட்சி கல்லூரியில் பொறியியல் படித்துக் கொண்டிருக்கும்போதே சினிமாவில் பாடுவதற்கான வாய்ப்புகள் வந்ததால், படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு இசையுலகத்தில் அடியெடுத்து வைத்தார். தமிழ் திரையுலகில் அவர் பாடிய முதல் பாடல் வந்த படம் ’குழந்தை உள்ளம்’. இந்தப் படத்தையடுத்து சாந்தி நிலையம், அடிமைப்பெண் ஆகிய படங்களில் பாடினார்.

ஆனால், முதலில் வெளியே வந்த படம் அடிமைப்பெண். இந்தப் படத்தில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடிய முதல் பாடல் ’ஆயிரம் நிலவே வா’ என்ற பாடல், அவரது திரை வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றிப் பாடலாக அமைந்தது. அன்று தொடங்கிய அவரது திரைப்பயணத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, ஒரியா, மராட்டி உள்ளிட்ட ஏராளமான இந்திய மொழிகளில் கிட்டத்தட்ட 42,000 பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார்.

குடும்பத்துடன் எஸ்பிபி
குடும்பத்துடன் எஸ்பிபி

எஸ்.பி.பிக்கு மிகவும் பிடித்த பின்னணிப் பாடகர் என்றால் அது ரவிதான். எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பின்னணிப் பாடகர் ரவியை தனது காட்ஃபாதராகவே நினைத்திருந்தார். அவரது பாடல்களை இரவில் கேட்டு, பாடி மகிழ்வார்”என்றார்.

”ஆரம்ப காலங்களில் அதிக அளவில் திரைப்படங்களை பார்ப்பதில்தான் எஸ்பி.பாலசுப்ரமணியமுக்கு விருப்பம் அதிகம். கேசினோ, சத்தியம், தேவி, சபையர் ஆகிய திரையரங்குகளில் செகண்ட் ஷோ படம் பார்ப்பதை வழக்கமாக வைத்திருந்தார். ஆங்கிலம் முதல் அனைத்து மொழிப் படங்களையும் திரைக்கு வந்த உடனே பார்க்கும் வழக்கம் அவருக்கு உண்டு” எனவும் சிவக்குமார் தெரிவிக்கிறார்.

எஸ்பிபியின் விருப்பங்கள்

எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு மிகவும் பிடித்த விஷயம், தொலைக்காட்சி பார்ப்பது. கிரிக்கெட் மீது அவருக்கு பிரியம் அதிகம். ஆரம்ப காலங்களில் ஸ்டேடியத்திற்கு சென்று நேரடியாக கிரிக்கெட் பார்த்த அவர், காலப்போக்கில் தொலைக்காட்சியில் பார்ப்பது வசதியாக இருந்ததால் தொலைக்காட்சியில் பார்ப்பதையே வழக்கமாக்கிக் கொண்டார்.

எஸ்பிபி சகோதரர் சிவகுமார்
எஸ்பிபி சகோதரர் சிவகுமார்

கிரிக்கெட் பார்ப்பதற்கு என்றே ஏராளமான பாடல் பதிவுகளை எஸ்.பி.பி கேன்சல் செய்துள்ளாராம். கிரிக்கெட் நடைபெறும் தேதிகளில் திரைப்பட நிறுவனங்களுக்கு தேதி கொடுக்க மாட்டார். அந்த அளவிற்கு கிரிக்கெட் அவருக்கு பிடித்தமான ஒன்று. அவரது தெருவில் வசிக்கும் சிறுவர்களோடு வீட்டின் முன்பு கிரிக்கெட் ஆடுவதும் அவரது விருப்பமான பொழுதுபோக்குகளில் ஒன்று.

இனிப்பில் பால்கோவா, உணவு வகைகளில் பருப்பு, நெய் சாதம் அவரது விருப்பமான உணவு. ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர். அவரின் மிகவும் பிடித்தமான தெய்வம் வெங்கடாசலபதி. அடிக்கடி திருப்பதிக்கு சென்று வருவார். அதேபோன்று, ஆண்டிற்கு ஒருமுறை ஸ்ரீசைலம், காசி ஆகிய இடங்களுக்கும் ஆன்மீகப் பயணம் சென்று வருவார்.

எஸ்பிபியின் குடும்பம்

எஸ்பிபிக்கு பார்வதி, ஷைலஜா, வசந்தா என மூன்று தங்கைகளும் ஒரு தம்பியும் உள்ளனர். இவரது மனைவி பெயர் சாவித்திரி. இவர்களுக்கு பல்லவி என்ற மகளும், சரண் என்ற மகனும் உள்ளனர்.

இன்னும் நிறைவேறாத ஆசை

”பாடகர் எஸ்பிபியின் மிகப்பெரிய ஆசை கூட்டுக் குடும்பமாக வாழ வேண்டும் என்பதுதான். ஆனால் அது இப்போதுவரை நிறைவேறவில்லை” என வருத்தத்துடன் தெரிவிக்கிறார் சிவக்குமார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.