ETV Bharat / state

ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரங்கராஜன் தலைமையிலான குழுக்களின் பணிகள் என்ன?

author img

By

Published : May 11, 2020, 4:58 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் ஊரடங்கால் ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்புகளை சீரமைக்க ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரங்கராஜன் தலைமையிலான குழு உருவாக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த சனிக்கிழமை அறிவித்தார். இந்த குழுக்களின் பணிகள் குறித்து இந்த செய்தித்தொகுப்பில் காணலாம்.

rangarajan
rangarajan

உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸினை கட்டுப்படுத்த தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 25ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதன்காரணமாக, பல்வேறு தொழிற்சாலைகளும் மூடப்பட்டு மக்கள் வேலையிழந்து தவித்துவந்தனர். இதனால் மாநிலத்தின் பொருளாதாரம் மிகுந்த பாதிப்பிற்குள்ளாகியுள்ளது. இதையடுத்து, மாநிலத்தில் மூன்றாம் கட்டமாக ஊரடங்கு சில கட்டுப்பாடுகளுடன் அமல்படுத்தப்பட்டு குறிப்பிட்ட தொழிற்சாலைகள் இயங்கவும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பொருளாதாரத்தை மீட்பது குறித்து ஆலோசிக்க தமிழ்நாடு அரசு கடந்த சனிக்கிழமை ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரங்கராஜன், பொருளாதார நிபுணர்கள், பல்துறை வல்லுநர்கள் அடங்கிய 24 பேர் கொண்ட குழுவினை அமைத்துள்ளது. இந்த குழு மாநிலத்தின் பொருளாதார நிலைகளை ஆராய்ந்து மூன்று மாதங்களுக்குள் ஆய்வறிக்கை தாக்கல் செய்யவுள்ளது.

இக்குழு ஆய்வு செய்யும் துறைகள்:

  • கரோனா பெருந்தொற்றால் பல்வேறு துறைகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை முழுமையாக ஆய்வு செய்தல், உடனடியாக மற்றும் நடுத்தர காலத்தில் அளிக்கப்படவேண்டிய நடவடிக்கைகள்
  • ஊரடங்கால் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் கூடுதல் செலவினங்களுக்கான முன் தடுப்பு நடவடிக்கைகள்
  • மாநிலத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்த குறுகிய காலத்திலும், நடுத்தர காலத்திலும் இருக்கும் வாய்ப்புகளை ஆராய்தல்
  • பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்களை ஆய்வறிந்து கூறுதல்.
  • பொருளதார வளர்ச்சிக்கான முக்கியமான துறைகளை கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீட்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள்
  • முக்கிய துறைகளுக்குத் தேவையான உதவிகளைக் கண்டறிதல்.
  • மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியமானதாகக் கருதப்படும் துறைகளின் வளர்ச்சியை ஊக்குவிக்கவும், ஆதரவளிக்கவும், மாநில அரசு சார்பில் எடுக்கவேண்டிய சிறப்பு நடவடிக்கைகளை ஆராய்தல்
  • கரோனா வைரஸால் தமிழ்நாடு அரசின் நிதிச்சூழலில் ஏற்பட்ட பாதிப்பு குறித்து அறிக்கை சமர்பித்தல்
  • மாநில நிதிச்சூழலை மேம்படுத்தும் வழிகள் கண்டறிதல்
  • வரி விதிப்பை உயர்த்துதல்
  • உள்நாட்டு மொத்த உற்பத்தி விகிதத்தை உயர்த்துதல்
  • துறைகளுக்கு முன்னுரிமை அளித்துச் செலவழித்தல்
  • வருவாயைப் பெருக்குவது குறித்து ஆய்வு செய்தல்
  • மாநில அரசுக்கு இருக்கும் நிதிப் பிரச்னைகளை கண்டறிதல்
  • பொருளாதார மேம்பாட்டு நடவடிக்கைகளை ஊக்குவித்தல்
  • மத்திய அரசுடன் இணைந்து, மாநில அரசு எடுக்க வேண்டிய அத்தியாவசிய நடவடிக்கைகள் குறித்து ஆராய்தல்
  • கட்டுமானத்துறை, சிறு தொழில்கள், சிறு வியாபாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு தேவைப்படும் நிதி, நிதியுதவி அளித்தல்
  • இவற்றை அறிக்கையாக தயார் செய்து தமிழ்நாடு அரசிடம் தாக்கல் செய்தல் என்பன.

இதையும் படிங்க: முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரங்கராஜன் தலைமையில் உயர்மட்ட குழு - தமிழ்நாடு அரசு அறிவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.