சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது துணை நடிகர் ஒருவர் பாலியல் புகார் அளித்ததன் பேரில் அடையாறு காவல் நிலையத்தில் மணிகண்டன் மீது ஆறு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து தலைமறைவாக இருந்த மணிகண்டனை காவல் துறையினர் இன்று (ஜுன் 20) அதிகாலை பெங்களூருவில் கைது செய்தனர்.
பின்னர், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு, ஜூலை 2ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையும் படிங்க: 'பரணி மூலம் தூது, சட்டப்பேரவைக்குள் உலா, கருக்கலைப்பு, கொலை மிரட்டல்' - நடிகை சாந்தினி பரபரப்பு புகார்!