முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி சி.எஸ். கர்ணன் உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகளின் மனைவிகள் பற்றி தரக்குறைவாக பேசிய வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதையடுத்து பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் எழுந்துள்ளது.
இந்நிலையில் நீதிபதிகள் அவரது மனைவிகள் குறித்து அவதூறு பரப்பும் வகையில் பேசிய சி.எஸ் கர்ணன் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கக்கோரி டெல்லி தமிழ் வழக்கறிஞர்கள் அசோசியேசன் சார்பாக மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினரிடம் ஆன்லைன் மூலம் புகாரளிக்கப்பட்டது.
இந்த புகாரின் அடிப்படையில் முன்னாள் நீதிபதி சி.எஸ் கர்ணன் மீது கலகத்தை தூண்டுதல், பெண்கள் குறித்து அவதூறு பரப்பும் வகையில் பேசுதல் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் மத்திய குற்றபிரிவு சைபர் கிரைம் காவலர்கள் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
நீதீபதி கர்ணன் கடந்த 2017 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஊழலில் ஈடுபட்டு வருவதாக அவதூறு பரப்பும் வகையில் பேசியதால் கைதாகி சிறைக்கு சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஜம்மு காஷ்மீர் புதிய சட்டத்துக்கு ஒமர் அப்துல்லா எதிர்ப்பு!