ETV Bharat / state

முன்னாள காதலியுடன் தகராறு - 2 பேருக்கு அரிவாள் வெட்டு - 3 பேர் கைது - ex Boyfriend threatened to show videos taken when he fell in love if she refused to talk

முன்னாள் காதலியுடன் ஏற்பட்ட தகராறில் இரண்டு பேரை அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடியவர் உள்ளிட்ட 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

முன்னாள் காதலன் உட்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்பேச மறுத்தால் காதலித்த போது எடுத்த வீடியோக்களை காட்டி விடுவேன் என மிரட்டிய காதலன்..ex-boyfriend-threatened-to-show-videos-taken-when-he-fell-in-love-if-she-refused-to-talk
முன்னாள் காதலன் உட்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர் பேச மறுத்தால் காதலித்த போது எடுத்த வீடியோக்களை காட்டி விடுவேன் என மிரட்டிய காதலன்..ex-boyfriend-threatened-to-show-videos-taken-when-he-fell-in-love-if-she-refused-to-talk
author img

By

Published : Apr 23, 2022, 12:07 PM IST

Updated : Apr 23, 2022, 2:02 PM IST

சென்னை: அம்பத்தூர் அருகே பாடி கலைவாணர் நகரை சேர்ந்தவர் சர்மிளா, வயது 21. இவர் திருமுல்லைவாயலில் உள்ள ஒரு ஸ்வீட்ஸ் கடையில் வேலை பார்த்து வருகிறார். சர்மிளா பதினோராம் வகுப்பு படிக்கும்போது திருவேற்காட்டை சேர்ந்த சங்கர் (வயது 24) என்பவரைக் காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் திடீரென இவர்களுக்கு இடையேயான தொடர்பு துண்டிக்கப்பட்டது.

இதனையடுத்து, சங்கர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அன்னரசிகா (வயது 24) என்ற பெண்ணை திருமணம் செய்தார். அவர்களுக்கு குழந்தையும் பிறந்துள்ளது. இந்த விவகாரம் கடந்த மாதம் சர்மிளாவுக்கு தெரியவந்ததில் அதிர்ச்சி அடைந்த அவர் சங்கருடன் பேசுவதை நிறுத்தினார். இந்நிலையில் நேற்று முன்தினம் (ஏப்ரல்.21) மாலை கடையில் சர்மிளா இருந்த போது சங்கர் தனது மனைவி பிள்ளையுடன் அங்கு சென்றுள்ளார்.

3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்
3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்

அப்போது, கடையில் இருந்த சர்மிளாவிடம் குளிர்பானம் வாங்கி அருந்திக் கொண்டிருந்தார். அப்போது தன்னிடம் பேசுமாறு சர்மிளாவிடம் வற்புறுத்தி உள்ளார். பேச மறுத்ததால் காதலித்த போது எடுத்த வீடியோக்களை காட்டி விடுவேன் என மிரட்டியுள்ளார். இதனால் திடீரென சங்கருக்கும் சர்மிளாவுக்கும் தகராறு ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரம் அடைந்த சர்மிளா தனது தம்பி இளங்கோவனுக்கு போன் செய்துள்ளார்.

திருமுல்லைவாயல் காவல் நிலையம்
திருமுல்லைவாயல் காவல் நிலையம்

இதனிடையே, அவர் நண்பர் சுரேந்திரன் என்பவருடன் சம்பவ இடத்திற்கு வந்தார். அதன் பின் கடையில் குளிர்பானம் அருந்தி கொண்டிருந்த சங்கரை இருவரும் சரமாரியாகத் தாக்கினர். இதனையடுத்து, சங்கர் திருவேற்காட்டை சேர்ந்த நண்பர்களுக்குத் தகவல் தெரிவித்துள்ளார். அடுத்த சில நிமிடங்களில் 7 பேர் கொண்ட கும்பல் ஆயுதங்களுடன் வந்தது. அங்கிருந்த இளங்கோவன் சுரேந்திரன் ஆகியோரை சரமாரியாக வெட்டியது.

இதனால் அப்பகுதியே போர்க்களம் போல் ஆனது. மேலும், சிறிது நேரத்தில் அந்த கும்பல் தப்பிச் சென்றது. இதனையடுத்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். இதில் தலை மற்றும் கைகளில் வெட்டுக்காயம் அடைந்த இளங்கோவன் சுரேந்திரன் ஆகியோர் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் விஜயராகவன் தலைமையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அப்பகுதி சிசிடிவி கேமரா பதிவு மூலம் 6 பேர் கொண்ட கும்பலை தேடி வந்தனர்.

முன்னாள் காதலன் உட்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்

இதில் தலைமறைவாக இருந்த திருவேற்காடு செல்லியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சங்கர் 23, அயப்பாக்கம் திருவள்ளூர் குடியிருப்பைச் சேர்ந்த எரேமியா 24, அம்பத்தூர் சத்யா நகர் முத்துமாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த தமிழ்செல்வன் 23 ஆகிய 3 பேரை தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள 4 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: அம்மாவான 17 வயது சிறுமி... காரணம் 12 வயது சிறுவன்... ஷாக்கில் தஞ்சாவூர்!

Last Updated : Apr 23, 2022, 2:02 PM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.