சென்னை: சென்னை பெருநகர மாநராட்சி அலுவலர்கள் சென்னை அரும்பாக்கம் மற்றும் அதன் சுற்றுவட்டார கூவம் கரையோரம் பகுதிகளில் பருவ கால முன்னெச்சரிக்கை மற்றும் சிங்காரச் சென்னை திட்டத்திற்காக 90-க்கும் மேற்பட்ட வீடுகள் அகற்றப்பட்டதால் அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை அரும்பாக்கம் சுற்றுவட்டாரங்களில் கூவம் கரையோரம் பகுதிகளில் 90க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வந்தனர். இந்நிலையில், சிங்காரச் சென்னை திட்டத்திற்காக அப்பகுதியில் இருந்த வீடுகள் முழுவதும் சென்னை மாநகராட்சி நிர்வாகத்தினரால் இடிக்கப்பட்டது. அதற்கு காரணமாக வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால் பாதுகாப்பு நடவடிக்கை என மாநகராட்சி அலுவலர்கள் தெரிவித்தனர்.
மேலும், இவர்களுக்கு மாற்று இடமும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். ஆனால் அப்பகுதி மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போலீஸ் குவிக்கப்பட்டது.
இந்த தகவல் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வைரல் ஆகியுள்ளது. சமூக ஆர்வலர்கள் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஸ்மார்ட் சிட்டி மற்றும் மழை வெள்ளத்தை காரணம் காட்டி தங்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: மக்கள் அன்பை பொழிகிறார்கள்: மீராபாய் சானு நேர்காணல்!