ETV Bharat / state

’தர்பார்' படத்திற்கு மட்டும் செலவு செய்யாதீங்க’ - ப. சிதம்பரம்

சென்னை: 'தர்பார்' போன்ற படங்களுக்குச் செலவு செய்வதுபோல் புத்தகம் வாங்குவதற்கும் செலவு செய்ய வேண்டும் என ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

everyone must buy a book like spending money on darbar film, says P Chidambaram
everyone must buy a book like spending money on darbar film, says P Chidambaram
author img

By

Published : Jan 11, 2020, 8:01 AM IST

Updated : Jan 11, 2020, 11:55 AM IST

செளந்தரா கைலாசம் இலக்கியப்பரிசு எழுத்து மற்றும் கவிதா பதிப்பகம் இணைந்து நடத்திய நூல் வெளியீட்டு விழா சென்னை மைலாப்பூரில் உள்ள பாரதிய வித்தியபவனில் நேற்று நடைபெற்றது. இதில் கீரனூர் ஜாகீர் ராஜா எழுதிய 'சாமானியரைப் பற்றிய குறிப்புகள்' என்னும் நாவலும் ப. சிதம்பரத்தின் 'அச்சமில்லை அச்சமில்லை' என்ற தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நாவலும் வெளியிடப்பட்டது.

கவிஞர் சிற்பி, கவிஞர் வைரமுத்து, அவ்வை நடராசன் உள்ளிட்டவர்கள் சிறப்பு உரை வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி, மக்களவை உறுப்பினர் டி.கே. ரங்கராஜன், தமிழ்நாடு காங்கிரஸ் ஊடக தலைவர் கோபன்னா, முன்னாள் காங்கிரஸ் நிர்வாகி கராத்தே தியாகராஜன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் ஜாகிர் ராஜா எழுதியுள்ள சாமானியர் பற்றிய குறிப்புகள் என்னும் நாவலுக்கு, செளந்தரா கைலாசம் இலக்கியப்பரிசு சார்பாக ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்பட்டது. இரு நாவல்களை கவிஞர் சிற்பி வெளியிட, அதனை கவிஞர் வைரமுத்து பெற்றுக்கொண்டார்.

மேடையில் உரையாற்றிய கவிஞர் சிற்பி, ”ஒவ்வொரு நாவலிலும் ஒவ்வொரு சிக்கலை எடுத்து பேசுவது ஜாகிரின் இயல்பு. இஸ்லாமியத்திலும் ஏற்றத்தாழ்வு உள்ளது என்பது அவரின் நாவல் மூலம் எடுத்து காட்டியுள்ளார். சிதம்பரம் எழுதியுள்ள 'அச்சமில்லை அச்சமில்லை' நாவல் மூலம் ஒரு சாமானியன் கூட பொருளாதாரம் குறித்து தெரிந்து கொள்ள முடியும். விலை கட்டுப்பாடு, உரிமை மீது கட்டுப்பாடு, உற்பத்தி மீது கட்டுப்பாடு போன்றவற்றை எழுதி உரிமையை தோல் உரித்துக்காட்டியுள்ளார் சிதம்பரம்” என்றார்.

தொடர்ந்து பேசிய ப. சிதம்பரம், ”பொருளாதாரம் 2018இல் சரிவு ஏற்படும் என்று கணித்திருந்தேன். நான் மட்டுமல்ல பொருளாதார அறிஞர்களும் இதையே கூறினார்கள். ஆனால், இதை அரசு கண்டுகொள்ளவில்லை. அதேபோல் பொருளாதாரம் குறித்து யாரும் பேசுவதோ, எழுதுவதோ கிடையாது. காரணம் இந்தியாவை ஆள்வது அரசியல் கட்சி இல்லை, அச்சம்தான் ஆள்கின்றது.

நிகழ்ச்சியில் பேசிய ப. சிதம்பரம்

இந்திய மக்களைப் போல வெகுளி மக்களை நான் எங்கும் பார்த்தது இல்லை. பத்திரிகைகளில் வருவதை அப்படியே நாம் நம்புகின்றோம். இந்திய மக்கள் எதையும் நம்புகின்ற வெகுளித்தனத்தையும் அச்சத்தையும் போக்க வேண்டும். 'தர்பார்' போன்ற திரைப்படங்களுக்குச் செலவு செய்வதுபோல் புத்தகம் வாங்குவதற்கும் செலவு செய்ய வேண்டும். அனைவரும் மாதம் ஒரு புத்தகம் வாங்கும் பழகத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். நூலை வாங்கினால்தான் எழுத்தாளர்களும் எழுத்துகளும் பிழைக்கும்” என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய கவிஞர் வைரமுத்து, ”மறதி என்னும் நோயினால் தமிழர்களின் ஆளுமை, வரலாற்றுப் பெருமைகள் மிக எளிதாக மூடப்படுகின்றன. ஜாகிர் ராஜா, தன் நாவல் மூலம் சாமானிய உணர்வுகளை காண்பித்துள்ளார். அதே போல் அச்சமில்லை அச்சமில்லை என்று பாதியார் கூறியதை திரும்பக் கூறுவதற்கு நமக்கு சிதம்பரம் தேவைப்படுகின்றார். அரசியல், பொருளாதாரம் குறித்து கூர்மையாக இந்நாவல் தெரிவிக்கிறது. இது அரசிற்கு எதிரானது அல்ல, அரசு நிர்வாகம் செம்மைப்படுவதற்கு சிதம்பரம் அளித்துள்ள நூல்.

கவிஞர் வைரமுத்து பேசியபோது

சிதம்பரத்தை படுத்திய பாடு அனைவரும் அறிந்ததே. ஆனால், அவரின் சொல் நாகரிகம் என்றும் தவறி விழுந்தது இல்லை. பன்முகத்தன்மை, ஜனநாயகம் ஆகிய தன்மைகளில் இருந்து இந்தியா நழுவுகின்றதா இல்லையா, அவ்வாறு நழுவினால் அதை எவ்வாறு எதிர்கொள்வது என்பதை எடுத்துகாட்டியுள்ளது அச்சமில்லை அச்சமில்லை நூல். அவர் பொறுமையாக இருப்பதால் கோபம் வராது என்று என்ன வேண்டாம், பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு” என்றார்.

இதையும் படிங்க: ’ஒரு இரவுக்குள் திமுக உரிய இடங்களை ஒதுக்க வேண்டும்’ - எச்சரிக்கை விடுக்கிறாரா சிதம்பரம்

Intro:Body:செளந்தரா கைலாசம் இலக்கியப்பரிசு எழுத்து மற்றும் கவிதா பதிப்பகம் இனைந்து நடத்து நூல் வெளியீடு விழா சென்னை மைலாப்பூரில் உள்ள பாரதிய வித்தியபவனில் நடைப்பெற்று வருகின்றது.

இதில் கீரனூர் ஜாகீர் ராஜா எழுதிய 'சாமானியரைப் பற்றி குறிப்புகள்' என்னும் நூலும், எம்.பி ப.சிதம்பரத்தின் 'அச்சமில்லை அச்சமில்லை' தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நாவலும் வெளியிடப்பட உள்ளது.

கவிஞர் சிற்பி, கவிஞர் வைரமுத்து, அவ்வை நடராசன் உள்ளிட்டவர்கள் சிறப்பு உரை வழங்க உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, எம்.பி டி.கே.ரங்கராஜன், தமிழ்நாடு காங்கிரஸ் ஊடக தலைவர் கோபன்னா, முன்னாள் காங்கிரஸ் நிர்வாகி கராத்தே தியாகராஜன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில் ஜாகிர் உசேன் எழுதியுள்ள சாமானியர் பற்றிய குறிப்புகள் என்னும் நாவலுக்கு செளந்தரா கைலாசம் இலக்கியப்பரிசு சார்பாக ரூபாய் ஒரு லட்சம் பரிசு வழங்கப்பட உள்ளது.

சாமானியரை பற்றிய குறிப்புகள் மற்றும் அச்சமில்லை அச்சமில்லை என்னும் இரு நாவல்களை கவிஞர் சிறபி வெளியிட முதல் பிரதியை கவிஞர் வைரமுத்து பெற்றுக்கொண்டார்.

கவிஞர் சிற்பி மேடை பேச்சு, ஒவ்வொரு நாவலும் ஒவ்வொரு சிக்கலை எடுத்து பேசுவது ஜாகிரின் இயல்பு. இஸ்லாமியத்திலும் ஏற்றத்தாழ்வு உள்ளது என்பது அவரின் நாவல் மூலம் எடுத்து காட்டியுள்ளார் என பாராட்டினார். சிதம்பரம் எழுதியுள்ள அச்சமில்லை அச்சமில்லை நாவல் மூலம் ஒரு சாமானியன் கூட பொருளாதாரம் பற்றி தெரிந்து கொள்ளும்விதமாக உள்ளது. விலை கட்டுப்பாடு, உரிமை மீது கட்டுப்பாடு, உற்பத்தி மீது கட்டுப்பாடு போன்றவை பற்றியில் உரிமையை தோல் உரித்து காட்டும் இந்த நூலில் என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய எழுத்தாளர் நாஞ்சில் நாடன், தமிழன் தமிழன் என்று சொன்னால் என்ன ஆக போகின்றது. கடந்த 10 ஆண்டுகளில் என்னுடைய ஒரு புத்தகம் கூட விற்கப்படவில்லை. ஒவ்வொரு எழுத்தாளரின் நிலைமை இவ்வாறு தான் உள்ளது என வேதனை தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய எம்.பி சிதம்பரம், செளந்தர கைலாசம் பேசுவதை பத்து நிமிடம் கேட்டால் ஒரு பாடலை கேட்பது போல் தான் இருக்கும். இனிமேல் இந்த ஆண்டு போல் ஆண்டு தோரும் செளந்தரா கைலாசம் இலக்கியப்பரிசு விருது வழங்குவது தொடரும் என தெரிவித்தார். தொடர்ந்து இருக்க கூடிய தமிழக அரசு நூலகங்களுக்கு நூல்கள் வாங்குவதற்கு செலவிடுவது கிடையாது. தமிழக அரசு நூல்களை வாங்க எழுத்தாளர்கள் அவர்களை வாங்க வேண்டும் நிலை உள்ளது என தெரிவித்தார். அச்சமில்லை அச்சமில்லை நூல் 2020 இல் கூட பொருந்துமோ என்ற வருத்தம் உள்ளது. பொருளாதாரம் 2018 இல் சரிவு ஏற்படும் என்று கணித்திருந்தேன். ஆனால் இதை அரசு கண்டுகொள்ளவில்லை. அதேபோல் பொருளாதாரம் பற்றி யாரும் பேசுவதோ, எழுதுவதோ கிடையாது காரணம் இந்தியாவை ஆள்வது அரசியல் கட்சி இல்லை, அச்சம் தான் ஆள்கின்றது. இந்திய மக்கள் மாதிரி வெகுளி மக்களை நான் பார்த்தது இல்லை. பத்திரிக்கைகளில் வருவதை அப்படியே நம்புகின்றோம். இந்திய மக்கள் எதையும் நம்புகின்ற வெகுளி தனம், பயம் போக வேண்டும். தர்பார் படங்களுக்கு செலவு செய்வது போல் புத்தகம் வாங்குவதற்கும் செலவு செய்ய வேண்டும். அனைவரும் மாதம் ஒரு புத்தகம் வாங்கும் பழகத்தை ஏற்படுத்தி கொள்ள வேண்டும். நூலை வாங்கினால் தான் எழுத்தாளர் ,நூல்கள், மொழி, எழுத்துக்கள் பிழைக்கும் என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய கவிஞர் வைரமுத்து, மறதி என்னும் நோயினால் தமிழர்களின் ஆளுமை, வரலாற்றுக்கள், பெருமைகள் மிக எளிதாக மூடப்படுகின்றது. இந்த நேரத்தில் செளந்தரா கைலாசம் பெயரில் பரிசு வழங்குவதை சிதம்பரம் ஏற்படுத்தியுள்ளார். அம்மாவிற்கு பெருமை சேர்த்த மகனை பார்த்துள்ளோம், மாமியாருக்கு பெருமை சேர்த்த மகனை பார்த்துள்ளீர்களா. ஜாகிர் ராஜா தன் நாவல் மூலம் சாமானிய உணர்வுகளை காண்பித்துள்ளார். அதே போல் அச்சமில்லை அச்சமில்லை என்று பாதியார் கூறியதை திரும்ப கூறுவதற்கு நமக்கு சிதம்பரம் தேவைப்படுகின்றார். அரசியல், பொருளாதாரம் பற்றி கூர்மையாக உள்ளது. இது அரசிற்கு எதிரானது அல்ல, அரசு நிர்வாகம் செம்மை பாடுவதற்கு சிதம்பரம் கொடுத்துள்ள நூல். சிதம்பரத்தை படுத்திய பாடு அனைவரும் அறிந்தே, ஆனால் அவரின் ஒரு சொல் நாகரிகம் தவறி விழுந்தது இல்லை. பன்முகத்தன்மை, ஜனநாயகம், ஆகிய மூன்று தன்மைகளில் இருந்து இந்தியா நழுவுகின்றதா இல்லையா, அவ்வாறு நிழுவினால் அதை எவ்வாறு எதிர்கொள்வது என்பதை எடுத்துகாட்டியுள்ளது இந்த நூல். அவர் பொறுமையாக இருப்பதால் கோபம் வராது என்று என்ன வேண்டாம், பொருமைக்கு எல்லை உண்டு, மேலும் கோபத்தை எங்கு, எப்படி காட்ட வேண்டு என்று தெரியும் என தெரிவித்தார் Conclusion:
Last Updated : Jan 11, 2020, 11:55 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.