ETV Bharat / state

நண்பகல் ஒரு மணி செய்திச் சுருக்கம் Top 10 news @1PM - tamilnadu news

ஈடிவி பாரத்தின் நண்பகல் ஒரு மணி செய்திச் சுருக்கத்தைக் காணலாம்.

ETVBHARAT TOP 10 NEWS AT 1PM
ETVBHARAT TOP 10 NEWS AT 1PM
author img

By

Published : Oct 4, 2021, 1:02 PM IST

மீண்டும் களைகட்டுமா? - தீபாவளியை எதிர்நோக்கும் திரையரங்கு உரிமையாளர்கள்!

திரையரங்குகள் தற்போது திறக்கப்பட்டுள்ள நிலையில், ரசிகர்கள் கொஞ்சம் கொஞ்சமாக திரையரங்குகளை நோக்கிப் படையெடுக்கத் தொடங்கியுள்ளனர். தீபாவளி நெருங்கிவரும் நிலையில் அதனை திரையரங்கு உரிமையாளர்கள் எதிர்நோக்கியுள்ளனர்.

T23 புலியை சுட்டுக்கொல்ல எதிர்ப்பு தெரிவித்த வழக்கு நாளை விசாரணை

நீலகிரியில் உலவும் ஆட்கொல்லி புலியான T23யை வேட்டையாட பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை நாளை (அக்.5) விசாரிப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பத்திரப்பதிவில் போலி ஆவணத்தை ரத்துசெய்ய பதிவாளருக்கு அதிகாரம்!

போலியாகப் பதிவுசெய்யப்பட்ட பத்திரப் பதிவுகளைப் பதிவாளர்களே ரத்துசெய்யும் சட்டத்திருத்தம் குறித்து தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

200 நாள்களுக்குப் பிறகு குறைந்த கரோனா எண்ணிக்கை!

நாட்டில் 200 நாள்களுக்குப் பிறகு 21 ஆயிரத்துக்கும் கீழ் கரோனா பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது.

திருப்பத்தூர் அருகே 16ஆம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டெடுப்பு

திருப்பத்தூர் அருகேயுள்ள மூக்கனூர் பகுதியில் மேற்கொண்ட கள ஆய்வில் வைணவக் கோயில்களுக்கு நிலக்கொடை கொடுத்ததற்கான ஆவணமாக அறியப்படும் குறியீடுகள் அடங்கிய கல்வெட்டை கண்டெடுத்தனர்.

வன்முறையின்போது எனது மகன் அந்த இடத்தில் இல்லை - அமைச்சர் விளக்கம்

உத்தரப் பிரதேசத்தின் லக்கிம்பூர் கெரியில் உழவர்கள் போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறையின்போது தனது மகனோ அல்லது தானோ அந்த இடத்தில் இல்லை என ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ரா கூறியுள்ளார்.

முதலாமாண்டு கல்லூரி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கின!

தமிழ்நாட்டில் இன்று முதல் முதலாமாண்டு கலை அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கின.

கே.பி. பார்க் அடுக்குமாடி: கட்டுமானம் மீது நடவடிக்கை எடுக்கப் பரிந்துரை

கே. பி. பார்க் அடுக்குமாடிக் குடியிருப்புகள் தரமில்லாமல் இருப்பது குறித்த ஆய்வறிக்கையை ஐஐடி குழு தாக்கல்செய்தது. இதில் கட்டுமானம் மீது நடவடிக்கை எடுக்கப் பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது.

டன்லப் தொழிற்சாலை ஊழியர்கள் தர்ணா!

அம்பத்தூர் டன்லப் தொழிற்சாலை நிர்வாகத்துக்குச் சொந்தமான ரூ.12.52 ஏக்கர் நிலத்தை தனிநபர்கள் ஆக்கிரமித்து விற்பனை செய்ய முயற்சிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதை மீட்டுத்தரக்கோரியும் முன்னாள் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினார்கள்.

சக்கர நாற்காலியில் எல்இடி டிவி அமைத்து கல்வி கற்பிக்கும் ஆசிரியர் - பெற்றோர்கள் பாராட்டு

சீர்காழியில் அரசுப்பள்ளி ஆசிரியர் ஒருவர் ஏழை, எளிய மாணவர்களுக்கு மாணவர்களின் வீடுகளுக்கே நேரில் சென்று, நடமாடும் சக்கர நாற்காலியில் எல்இடி டிவி அமைத்து கல்வி கற்பித்துவருகிறார். இவருக்குப் பெற்றோர், பொதுமக்கள் பாராட்டுகளைத் தெரிவித்துவருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.