ETV Bharat / state

நண்பகல் ஒரு மணி செய்திச் சுருக்கம் Top 10 news @1PM - 1 மணி செய்திகள்

ஈடிவி பாரத்தின் நண்பகல் ஒரு மணி செய்திச் சுருக்கத்தைக் காணலாம்.

1PM
1PM
author img

By

Published : Sep 30, 2021, 1:15 PM IST

1. நெல்லையில் நள்ளிரவு சைக்கிளில் ரோந்து சென்ற எஸ்பி: காவலர்கள் உற்சாகம்

நெல்லையில் கொலை பதற்றத்தைத் தணிக்க இரவு பகலாகப் பணிபுரியும் காவலர்களை உற்சாகப்படுத்த நள்ளிரவு சைக்கிள் ரோந்து சென்ற காவல் கண்காணிப்பாளர், காலையில் குளியுங்கள் - ஜாலியாக இருங்கள் என்று புத்துணர்ச்சியூட்டினார்.

2. தாய்- சேய் மருத்துவமனையைத் திறந்துவைத்த முதலமைச்சர்

தருமபுரி: அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒருங்கிணைந்த அவசர சிகிச்சை, மையத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்துவைத்தார்.

3. தொழில்முனைவோருக்கான மையமாகத் திகழும் சேலம் - முதலமைச்சர் ஸ்டாலின்

தமிழ்நாடு அளவில் தொழில்முனைவோருக்கான மையமாக சேலம் மாவட்டம் திகழ்ந்துவருவதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

4. Viral Video சிறுத்தையை கைத்தடியால் அடித்து விரட்டிய வீரப்பெண்

மகாராஷ்டிராவில் பெண் ஒருவர் தன்னைத் தாக்க வந்த சிறுத்தையைக் கைத்தடியால் அடித்து விரட்டிய சம்பவம் வைரலாகிவருகிறது.

5. அதியமான் கோட்டை காவல் நிலையத்திற்கு விசிட் அடித்த முதலமைச்சர்

சேலம் தருமபுரி மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுவரும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தருமபுரி அதியமான் கோட்டை காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

6. சொத்துக்குவிப்பு வழக்கு: விசாரணைக்கு ஆஜராகாத எம்.ஆர். விஜயபாஸ்கர்

உள்ளாட்சித் தேர்தலைக் காரணம்காட்டி சொத்துகுவிப்பு வழக்கின் விசாரணைக்கு இன்று (செப். 30) முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆஜர் (முன்னிலை) ஆகவில்லை.

7. ஒருவழியாகக் களமிறங்கும் ஏசி பேருந்துகள்!

தமிழ்நாடு முழுவதும் நாளை (அக். 1) முதல் கட்டுப்பாடுகளுடன் குளிர்சாதனப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

8. மாநகராட்சி குழந்தைகள் மையங்களில் தலைமைச் செயலர் இறையன்பு ஆய்வு

குழந்தைகளை அன்புடனும், பாதுகாப்பாகவும் பராமரிக்க வேண்டும் எனத் தலைமைச் செயலர் இறையன்பு குழந்தைகள் மைய பணியாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

9. மூன்று ஆண்டுகளுக்குள் மீண்டும் அல்கொய்தா - அமெரிக்க தளபதி எச்சரிக்கை

அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் ஆப்கானிஸ்தானில் மீண்டும் அல்கொய்தா தலைதூக்க வாய்ப்புள்ளது என அமெரிக்க ராணுவ தளபதி மார்க் மெய்லி எச்சரித்துள்ளார்.

10. எங்கிருந்து தொடங்கியதுனு தெரியல - புலம்பும் சமந்தா

நடிகை சமந்தா விவாகரத்துப் பெறவுள்ளதாக வெளியான செய்தி குறித்து முதல்முறையாக வாய் திறந்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.