ETV Bharat / state

11 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 11AM - முக்கிய செய்திகள்

ஈடிவி பாரத்தின் 11 மணி செய்திச் சுருக்கம்...

11 மணி செய்திச் சுருக்கம்
11 மணி செய்திச் சுருக்கம்
author img

By

Published : Jul 24, 2021, 11:07 AM IST

1. Tokyo Olympics: இந்திய ஆடவர் ஹாக்கி அணி வெற்றி

குரூப் ஏ பிரிவில் நடைபெற்ற போட்டியில் இந்திய அணி 3-2 என்ற கோல் கணக்கில் நியூசிலாந்து அணியை வீழ்த்தியது.

2. Tokyo Olympics- சீனா முதல் தங்கம்!

டோக்கியோ : ஜப்பான் தலைநகர் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் சீனா முதல் தங்கத்தை பதிவு செய்துள்ளது.

3. பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா கைது!

திமுகவின் வெற்றி சிறுபான்மையினர் போட்ட பிச்சை, நாகர்கோவிலில் எம்ஆர் காந்தி பணம் கொடுத்து வென்றார் என அதிரடியாக பேசிய கன்னியாகுமரி பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா மதுரை அருகே காவலர்களால் கைதுசெய்யப்பட்டார்.

4. 24 மணி நேரத்தில் 40 ஆயிரம் பேருக்கு கரோனா பாதிப்பு!

இந்தியாவில் நேற்று (ஜூலை 23) ஒரே நாளில் 35 ஆயிரத்து 87 பேர் கரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்ததாக ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

5. அரசு மருத்துவர்களின் ஊதிய உயர்வு பிரச்சினை தீர்க்கப்படும்- அமைச்சர் மா. சுப்பிரமணியம்

அரசு மருத்துவர்களின் ஊதிய உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகள் விரைவில் பேசித் தீர்க்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

6. ஜெய்சங்கரை சந்தித்த மாலத்தீவு வெளியுறவுத் துறை அமைச்சர்!

மாலத்தீவு வெளியுறவுத் துறை அமைச்சரும், ஐநாவின் 76ஆவது அமர்வின் பொதுக்குழு தலைவருமான அப்துல்லா ஷாஹித் நேற்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரைச் சந்தித்தார்.

7. ஆப்கான்- தஜிகிஸ்தான் எல்லைக்கு ராணுவ உபகரணங்களை அனுப்பிய ரஷ்யா!

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் பெரும்பாலான பகுதிகளை கைப்பற்றிவரும் சூழலில், ரஷ்யா தனது ராணுவ உபகரணங்களை ஆப்கான், தஜிகிஸ்தான் எல்லைக்கு அனுப்பியுள்ளது.

8. சினிமா பட பாணியில் நடந்த கொள்ளை: போலீஸ் விசாரணை

வாணியம்பாடியில் சினிமா பட பாணியில் காரில் சென்றவர்களிடம் ரூ.25 லட்சம் கொள்ளையடித்துச் சென்ற வழிப்பறி கும்பலை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

9. தடைசெய்யப்பட்ட போதைப் பொருள்கள் விற்பனை: 4 பேர் கைது

சேலத்தில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருள்களை விற்பனை செய்த நான்கு பேரை கைது செய்த காவல் துறையினர், சுமார் 570 கிலோ எடை கொண்ட போதைப் பொருள்களையும் பறிமுதல் செய்தனர்.

10.ஆர்யா நீ அப்பா, நான் மாமா- விஷால்

ஆர்யாவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ள நிலையில் அவரை வாழ்த்தியுள்ளார் நடிகர் விஷால்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.