மேகதாது அணை விவகாரம் குறித்து அனைத்துக் கட்சி கூட்டம்:
சென்னை தலைமைச் செயலகத்திலுள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் இன்று (ஜூலை 12) காலை 10:30 மணிக்கு மேகதாது அணை கட்டும் பிரச்னை தொடர்பாக விவாதிக்க அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது.
![அனைத்து கட்சி கூட்டம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/12429219_sjg.jpg)
பெண்களுக்கு பயண சீட்டு அவசியம்:
நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் பெண்களுக்கு இன்று முதல் இலவச பயணச் சீட்டு வழங்கப்படவுள்ளது.
![இலவச பயண சீட்டு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/12429219_op.jpg)
பொதுமக்களிடம் மனுக்கள் பெறும் முதலமைச்சர் ஸ்டாலின்:
சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (ஜூலை 12) காலை 10 மணியளவில் பொதுமக்களிடம் நேரடியாக மனுக்களைப் பெற்று அவர்களது குறைகளைக் கேட்டறிய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
![ஸ்டாலின்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/12429219_jdeg.jpg)
மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்திக்கும் ரஜினி:
மக்கள் மன்ற நிர்வாகிகளை ரஜினிகாந்த் இன்று (ஜூலை 12) சந்திக்கவுள்ளார். எதற்காக இந்தச் சந்திப்பு என தெரியாமல் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
![ரஜினி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/12429219_k.jpg)
வேலூரிலிருந்து புதுச்சேரிக்கு 5 அரசு பஸ்கள் இயக்கம்:
கரோனா பரவல் காரணமாக வேலூரிலிருந்து புதுச்சேரிக்கு செல்லும் பேருந்துகள் நிறுத்திவைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று (ஜூலை 12) முதல் ஐந்து பேருந்துகள் இயங்கவுள்ளன.
![பேருந்துகள் இயக்கம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/12429219_is.jpg)
மழை பெய்யக்கூடிய மாவட்டங்கள்:
தென்மேற்குப் பருவ மழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் இன்று (ஜூலை 12) நீலகிரி, கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள தேனி, திண்டுக்கல், தென்காசி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
![மழை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/12429219_jop.jpg)