குஜராத்தில் வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் பிரதமர் மோடி!
குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் உள்ள தோர்டோ பகுதிக்கு இன்று (டிச. 15) செல்லும் பிரதமர் நரேந்திர மோடி, பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவுள்ளதாக பிரதமர் அலுவலகம் செய்தி வெளியிட்டுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் இன்று கல்லூரிகள் திறப்பு!
கரோனா பெருந்தொற்று காரணமாக உத்தரகாண்ட் மாநிலத்தில் மூடப்பட்ட கல்லூரிகள் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. ஆர்டி - பிசிஆர் சோதனை செய்துகொண்ட பிறகு விருப்பத்தின்பேரில் கல்லூரிகளுக்குச் செல்லலாம் என மாநில அரசு தெரிவித்துள்ளது.
இன்றுமுதல் சிறப்பு ரயில்கள் இயக்கம்!
எர்ணாகுளம் - கண்ணூர் தினசரி சிறப்பு ரயில் இன்றுமுதல் இயக்கப்படும் என ரயில்வே அறிவித்துள்ளது. அதேபோல், திருவனந்தபுரம் விரைவு சிறப்பு ரயில் இன்றுமுதல் இயக்கப்படவுள்ளது. தாதர் - திருநெல்வேலி வார அதிவிரைவு சிறப்பு ரயிலும் இன்றுமுதல் இயக்கப்படவுள்ளது.
இன்றுமுதல் யாஹூ செயல்படாது!
டிசம்பர் 15 முதல் மக்கள் இனி யாஹூவிலிருந்து மின்னஞ்சல்களை அனுப்பவும் பெறவும் முடியாது என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இன்று வெளியாகிறது Android Go நோக்கியா போன்!
ஆண்ட்ராய்டு கோ ஸ்மார்ட்போனை டிசம்பர் 15ஆம் தேதி சீனாவில் அறிமுகம் செய்வதாக ஹெச்.எம்.டி. (HMD) குளோபல் அறிவித்துள்ளது. இது C சீரிஸ் ஸ்மார்ட்போனாக இருக்க வாய்ப்புள்ளது. சீன சமூக ஊடகத் தளமான வெய்போவில் நோக்கியா மொபைல் வெளியிட்ட ஒரு படத்தின் மூலம் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது சீன சந்தைக்கான நிறுவனத்தின் Android Go சாதனமாக இருக்கும்.