ETV Bharat / state

9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9pm - 9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news

ஈடிவி பாரத்தின் 9 மணி செய்திச் சுருக்கம் இதோ...

9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9pm
9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9pm
author img

By

Published : May 27, 2020, 8:48 PM IST

இந்தியாவின் பொக்கிஷம்... சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் நேரு!

புகழ்பெற்ற நியூ யார்க் டைம்ஸ் பத்திரிகை, நேருவை நவீன இந்தியாவின் சிற்பி என வருணிக்கிறது. 'ஜனநாயகத்தின் தலைமை சிற்பி நேரு என்பதற்கு மாற்று கருத்தே இல்லை' என வரலாற்றாசிரியர் குஹா கூறுகிறார்.

கரோனாவை தடுக்க எடுத்த நடவடிக்கை என்ன ? அறிக்கை அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு தேர்வுகள் நடத்தும் போது, கரோனா தொற்று பரவலை தடுக்க எடுக்கப்பட்டுள்ள நடைமுறைகள் குறித்த விரிவான அறிக்கையை ஜூன் 11ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யும்படி அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மக்கள் பயன்பாட்டுக்கு விரைவில் வருகிறது முதல் கேபிள் பாலம்!

தெலங்கானாவின் முதல் கேபிள் பாலமானது, ஜூலை மாத இறுதியில் பயன்பாட்டுக்கு வரும் என கட்டுமான அலுவலர் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

'ஒரு சீப்பு, ஒரு துண்டு அவசியம் கொண்டு வாங்க' - முடித் திருத்தகத்தின் விநோத அறிவிப்பு!

திண்டுக்கல்: முடித் திருத்த‌ம் செய்வதற்குக் கண்டிப்பாகத் துண்டு, சீப்பு ஆகியவை வேண்டும் என்ற முடித்திருத்தகத்தின் அறிவிப்பு பலரையும் கவர்ந்துள்ளது.

தயார் நிலையில் சென்னை மெட்ரோ ரயில்

சென்னை: கரோனா பெருந்தொற்று காரணமாக பொதுபோக்குவரத்து முடக்கப்பட்டுள்ள நிலையில் ஊரடங்கு காலத்துக்குப் பிறகு இயக்குவதற்காக சென்னை மெட்ரோ ரயில்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

சவரத் தொழிலாளியை தாக்கிய திமுக மாவட்ட துணை செயலாளர்!

திருப்பூர்: பல்லடம் பகுதியில் சவரத் தொழிலாளியை தாக்கிய திமுக மாவட்ட துணை செயலாளர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

'உமிழ்நீரை உபயோகித்து கரோனா ஸ்கிரீனிங்' - ஆய்வில் பிரான்ஸ்!

பாரிஸ்: கரோனா வைரஸ் பாதிப்பைக் கண்டறிய உமிழ்நீரைப் பயன்படுத்துவது குறித்த முயற்சியில் பிரான்ஸ் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

தமிழர்களுக்கு வழிகாட்டிய மும்பை தமிழ் பாஜக எம்.எல்.ஏ!

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக தமிழ் சட்டப்பேரவை உறுப்பினர், கேப்டன் ஆர் தமிழ்செல்வன் காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தமிழ்நாட்டுக்கு திரும்பும் மக்கள் எந்தெந்த வண்டிகளில், எத்தனை மணிக்கு பயணிக்கலாம் என்பது குறித்து தெளிவாக விளக்கமளித்துள்ளார்.

உயிரிழந்த தாயை எழுப்பும் குழந்தை... நெஞ்சை உருக்கும் கொடுமை!

பாட்னா: சிறப்பு ரயிலில் பிகாருக்கு வந்த பெண் உயிரிழந்த நிலையில், அதை அறியாத அவரது குழந்தை அவரை எழுப்ப முயன்ற சம்பவம் மனதை நிலைகுலைய செய்கிறது.

நான் இருக்கேன்; இந்தியா - சீனா மத்தியஸ்தத்திற்கு முன்வந்த ட்ரம்ப்

இந்தியா - சீனாவுக்கு இடையே எல்லையில் பூசல் நிலவிவரும் நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மத்தியஸ்தம் செய்ய தயார் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.