ETV Bharat / state

7 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 7am - ஈடிவி பாரத் 7 மணி செய்திகள்

ஈடிவி பாரத்தின் 7 மணி செய்திச் சுருக்கம் இதோ...

etv-bharat-top10-news-7-am
etv-bharat-top10-news-7-am
author img

By

Published : May 23, 2020, 6:52 AM IST

Updated : May 23, 2020, 7:29 AM IST

மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் வாழ்த்துக் கடிதம்!

சென்னை: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, உலக சுகாதார அமைப்பின் (WHO) நிர்வாகக் குழுத் தலைவராக பொறுப்பேற்ற மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தனுக்கு வாழ்த்துக் கடிதம் எழுதியுள்ளார்.

சென்னையில் 12ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி கிடையாது!

சென்னை: கரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருவதால், 12ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகளை இந்தாண்டு சென்னையில் மேற்கொள்ளப் போவதில்லை என அரசு தேர்வுத்துறை முடிவு எடுத்துள்ளது.

ரம்ஜான் சிறப்புத் தொழுகைக்கு அனுமதி கோரிய வழக்கு தள்ளுபடி!

சென்னை: ரம்ஜான் பண்டிகையன்று இரண்டு மணி நேரம் பள்ளிவாசல்களில் சிறப்புத் தொழுகை நடத்த அனுமதி கோரிய வழக்கைத் தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

80 நாட்கள் கடந்து கொச்சி வந்த ஐ.என்.எஸ். சுனைனா!

கொச்சி: இந்திய கடற்படையின் இரண்டாவது அதி நவீன ரோந்துக் கப்பலான ஐ.என்.எஸ். சுனாய்னா, ஏடன் வளைகுடாவில் தனது திருட்டு எதிர்ப்புப் பணியை(anti-piracy deployment) வெற்றிகரமாக முடித்துவிட்டு நேற்று கொச்சி துறைமுகம் வந்தடைந்தது.

EMI செலுத்த ரிசர்வ் வங்கி அறிவித்த காலநீட்டிப்பு வரவேற்கத்தக்கது - ஹர்தீப் சிங் பூரி

டெல்லி: EMI செலுத்த ரிசர்வ் வங்கி அறிவித்த கால நீட்டிப்பு வரவேற்கத்தக்கது என்றும்; இந்த அறிவிப்பு விமான நிறுவனங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் எனவும் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் 107 பேருடன் சென்ற விமானம் கீழே விழுந்து விபத்து

பாகிஸ்தான் கராச்சி விமான நிலையம் அருகே லாகூரிலிருந்து கராச்சிக்கு வந்த பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் (பிஐஏ) விமானம் கீழே விழுந்து விபத்துகுள்ளனாது.

50 ஆயிரம் பேருக்கு வேலை வழங்கும் அமேசான்!

டெல்லி: கரோனா பாதிப்பால் பொதுமக்கள் வீட்டில் இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால் அவர்களுக்குத் தேவையான பொருட்களை வழங்கவும்; தொழிலை விரிவுபடுத்தவும் 50 ஆயிரம் இந்தியர்களுக்கு வேலை வழங்குவதாக அமேசான் இந்தியா தெரிவித்துள்ளது.

அடிப்படை சுகாதார வசதியற்ற 200 கோடி மக்களுக்கு கோவிட்-19 பரவும் அபாயம்!

வாஷிங்டன் : உலகளவில் அடிப்படை சுகாதார வசதிகளைப் பயன்படுத்த முடியாத நிலையில் 200 கோடி மக்கள் உள்ளதாகவும், அவர்களுக்கு கோவிட்-19 பாதிப்பு ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளதாகவும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகும் #1MonthForVijayBdayBash ஹேஷ்டேக்

நடிகர் விஜய்யின் பிறந்தநாளுக்கு ஒரு மாத காலம் உள்ள நிலையில் அவரது ரசிகர்கள் #1MonthForVijayBdayBash என்ற ஹேஷ்டேக்கை சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.

ஆம்பன் புயல்: நலம் விசாரித்த வங்கதேச பிரதமர்

டெல்லி: ஆம்பன் புயல் ஏற்படுத்திய பாதிப்பு பற்றியும், மக்களின் நலனைப் பற்றியும் வங்க தேச பிரதமர் ஷேக் ஹசீனா, குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்திடமும் மம்தாவிடமும் தொலைபேசி மூலம் கேட்டு அறிந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Last Updated : May 23, 2020, 7:29 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.