ETV Bharat / state

4 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 4pm

ஈடிவி பாரத்தின் 4 மணி செய்திச் சுருக்கம் இதோ...

etv-bharat-top10-news-4-pm
etv-bharat-top10-news-4-pm
author img

By

Published : May 22, 2020, 3:43 PM IST

தெலங்கானா: கிணற்றிலிருந்து ஒன்பது உடல்கள் கண்டெடுப்பு

தெலங்கானா: வாரங்கல் மாவட்டத்தில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஒன்பது நபர்களின் உடல்கள் கிணற்றிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.

புனேவில் வேதியியல் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

மஹாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள வேதியியல் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

குண்டு வச்சிடுவோம்... முதலமைச்சருக்கு வாட்ஸ்அப்பில் கொலை மிரட்டல்!

லக்னோ: உத்தரப் பிரதேச முதலமைச்சர் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப் போவதாக காவல் துறையினருக்கு வாட்ஸ்அப்பில் குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது.

நாளை முதல் ஆட்டோக்கள் இயங்கும்!

சென்னை: சென்னை தவிர தமிழ்நாடு முழுவதும் நாளை முதல் ஆட்டோ, சைக்கிள் ரிக்ஷா ஆகியவற்றைத் தகுந்த பாதுகாப்போடு இயக்க தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது.

கல்வி டிவியில் நீட் தேர்வு பயிற்சி - யூடியூப் மூலம் மறுஒளிபரப்பு

சென்னை: தமிழ்நாட்டில் நீட் தேர்வு எழுத உள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கான பயிற்சியை கல்வி தொலைக்காட்சி மூலம் வழங்கி வருகின்றனர்.

திமுகவில் சாதிய வேறுபாடுகள் வளர்க்கப்படுகின்றன - பாஜகவில் இணைந்த பின் வி.பி துரைசாமி பேச்சு!

சென்னை: சாதி இல்லை, மதம் இல்லை என்று நேரக்கணக்கில் பேசும் திமுகவில்தான், சாதிய வேறுபாடுகள் உரம் போட்டு வளர்க்கப்படுவதாக திமுகவிலிருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ள வி.பி.துரைசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.

'கோட்டையில் குற்றாவாளிகள் இருப்பதால் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கை வரவில்லை'

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தைச் செய்த குற்றவாளிகள் கோட்டையில் இருப்பதால், அதனை விசாரிக்க அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஆணையத்தின் அறிக்கை இன்னும் வெளிவரவில்லை என திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

ரூ. 3 லட்சம் கோடி கடன் அறிவிப்பால் எதிர்பார்த்த தாக்கம் இல்லை - சிறு, குறு நிறுவனக் கூட்டமைப்பு

டெல்லி: தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் மத்திய அரசு வெளியிட்ட சிறப்பு நிதிச் சலுகை அறிவிப்பு தொழில்துறையில் எதிர்பார்த்த மாற்றத்தை ஏற்படுத்தவில்லை என சிறு, குறு நிறுவனக் கூட்டமைப்பின் தலைவர் அனிமேஷ் சக்சேனா தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபடும் பாகிஸ்தான் ராணுவம்

ஜம்மு-காஷ்மீர்: இந்தியா- பாகிஸ்தான் இடையேயான எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து ஐந்தாவது நாளாக தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது.

ஆகஸ்ட்டில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா டி20 தொடர்!

வரும் ஆகஸ்ட் மாதத்தில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.