ETV Bharat / state

10 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 10am

ஈடிவி பாரத்தின் 10 மணி செய்திச் சுருக்கம் இதோ...

etv-bharat-top10-news-10-am
etv-bharat-top10-news-10-am
author img

By

Published : May 22, 2020, 10:24 AM IST

ரெப்போ வட்டி விகிதம் 0.40 விழுக்காடு குறைப்பு - ரிசர்வ் வங்கி

கரோனா காரணமாக நாட்டில் பொருளாதார நடவடிக்கைகள் முடங்கியுள்ள நிலையில், வர்த்தக நடவடிக்கையை ஊக்குவிக்கும் விதமாக ரெப்போ வட்டி விகித்ததை 4.4 விழுக்காட்டிலிருந்து 4 விழுக்காடாக ரிசர்வ் வங்கி குறைத்துள்ளது.

பொருளாதாரம் சார்ந்த முக்கிய அறிவிப்புகள் இன்று வெளியீடு?

டெல்லி: ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் இன்று செய்தியாளர்களைச் சந்திக்கும் நிலையில், இந்தச் சந்திப்பின்போது பொருளாதார முன்னேற்றம் சார்ந்து முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆம்பன் பாதிப்புகளைப் பார்வையிட செல்லும் பிரதமர் மோடி!

டெல்லி: ஆம்பன் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிடுவதற்காக பிரதமர் மோடி இன்று மேற்கு வங்கம், ஒடிசா ஆகிய மாநிலங்களுக்குச் செல்ல உள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பெண்களை ஏமாற்றிய காசி... ஐந்து நாள்கள் காவலில் விசாரணை!

கன்னியாகுமரி: போக்சோ வழக்கில் கைதான காசியை மகளிர் காவல் நிலைய காவல் துறையினர் ஐந்து நாள்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்திவருகின்றனர்.

'குடிபெயர் தொழிலாளர்களுக்கு தானியம் மட்டுமல்ல, பணமும் தேவை'

டெல்லி: இந்தியாவில் உள்ள லட்சக்கணக்கான குடிபெயர் தொழிலாளர்களுக்கு உணவு தானியங்கள் மட்டுமல்லாமல் நேரடி பண உதவியும் தேவை எனப் பொருளாதார வல்லுநர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.

12 விதமான நோய்களுக்கு ஏற்ப, உயர் மருத்துவர்கள் குழு நியமனம்- அமைச்சர் விஜயபாஸ்கர்.

சென்னை: 12 விதமான நோய்களுக்கு ஏற்ப, உயர் மருத்துவர்கள் குழு விரைவில் நியமிக்கப்படவுள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்: 2 பாதுகாப்புப் படை வீரர்கள் வீரமரணம்!

ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் 2 பேர் வீரமரணமடைந்தனர்.

இந்திய ராணுவத்தினரை சீனா அத்துமீறி தடுத்து நிறுத்தியது - வெளியுறவுத் துறை

டெல்லி : சீனா-இந்தியா எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்டு வந்த இந்திய ராணுவப் படையினரை, சீனா அத்துமீறி தடுத்து நிறுத்தியதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம்: வட்டி விகிதத்தை அதிகரித்த ஐசிஐசிஐ வங்கி!

மும்பை: மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தின் வட்டி விகிதத்தை 0.50 விழுக்காட்டிலிருந்து 0.80 விழுக்காடு உயர்த்தி, ஆண்டுக்கு 6.55 விழுக்காடு வட்டி வழங்குவதாக ஐசிஐசிஐ வங்கி அறிவித்துள்ளது.

காலநிலை மாற்றத்துக்கும் கரோனா பரவலுக்கும் சம்பந்தம் இல்லை!

நியூ ஜெர்சி: பிரின்ஸ்டன் சுற்றுச்சூழல் (Princeton Environmental Institute) நிறுவனம் நடத்திய ஆராய்ச்சியில் காலநிலை மாற்றத்துக்கும் கரோனா வைரஸ் பரவலுக்கும் சம்பந்தம் இல்லை என தெரியவந்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.