ETV Bharat / state

1 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 1pm - ஈடிவி பாரத் 1 மணி செய்திகள்

ஈடிவி பாரத்தின் 1 மணி செய்திச் சுருக்கம் இதோ...

etv-bharat-top10-news-1-pm
etv-bharat-top10-news-1-pm
author img

By

Published : May 27, 2020, 12:55 PM IST

நேருவின் 56ஆவது நினைவு நாள்: பிரதமர் மோடி அஞ்சலி

நாட்டின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் 56ஆவது நினைவு நாளை முன்னிட்டு, பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார்.

தனிமைப்படுத்த கட்டணம் செலுத்த வேண்டும் - பினராயி அதிரடி

திருவனந்தபுரம்: இனிமேல் வெளிநாட்டிலிருந்து வரும் கேரளவாசிகள், தனிமைப்படுத்துதலுக்கு கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும் எனக் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ இல்லமாகும் வேதா இல்லம்

சென்னை: மறைந்த முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவின் போயஸ் தோட்டத்து வேதா இல்லத்தை தமிழ்நாடு முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ இல்லமாக மாற்ற தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முதலமைச்சர் முன்னிலையில் 17 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து!

சென்னை: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் ஜெர்மனி, பின்லாந்து, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளின் முதலீடுகளுக்கு 17 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்தாகின.

ஜூன் மாத ரேஷன் பொருள்களுக்கு வீடு வீடாக டோக்கன் - முதலமைச்சர் அறிவிப்பு

சென்னை: ஜூன் மாதம் வழங்கப்படவேண்டிய இலவச நியாயவிலைக் கடை பொருள்களுக்கு மே 29 முதல் 31ஆம் தேதிவரை அவரவர் வீடுகளுக்குச் சென்று டோக்கன் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

பள்ளிகள் எப்போது திறக்கலாம்?

கரோனா வைரஸ் பரவல் இருக்கும் சூழ்நிலையில் உலக சுகாதார நிறுவன வழிகாட்டுதலின்படியும், கரோனா பாதிப்பு எண்ணிக்கையை கருத்தில் கொண்டும் பள்ளிகளை இயக்கலாம் என இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் விஞ்ஞானி டாக்டர் ஜெரோம் தெரிவித்துள்ளார்.

30 பூச்சிக்கொல்லிகளுக்கு தடை - மத்திய அமைச்சர் சதானந்த கவுடா

பெங்களூரு : 30 பூச்சிக்கொல்லிகளைத் தடை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக ஈடிவி பாரத்துக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் சதானந்த கவுடா தெரிவித்துள்ளார்.

சச்சின் சிறப்பானவர்; காலிஸ் முழுமையான கிரிக்கெட்டர் - பிரெட் லீ!

ஆஸ்திரேலியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரெட் லீ, சச்சின் சிறப்பான வீரராக இருப்பினும், என்னுடைய கருத்துப்படி காலிஸ் ஒரு முழுமையான கிரிக்கெட்டர் என தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி Q4 காலாண்டில் 1.2% ஆக காணப்படுகிறது: எஸ்பிஐ

டெல்லி: இந்தியா முழுவதும் பொருளாதார சரிவு ஏற்பட்டுள்ளதால் FY20 நிதியாண்டில் Q4 காலாண்டின் வளர்ச்சி 1.2 விழுக்காடாக சரிந்துள்ளது என எஸ்பிஐ கணித்துள்ளது.

போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு ஆப்பிரிக்க நாடுகள் செவிசாய்க்க வேண்டும் - ஐநா

வாஷிங்டன் : கோவிட்-19 பெருந்தொற்றை கருத்தில் கொண்டு உள்நாட்டுப் போர்களை நிறுத்துமாறு ஐநா விடுத்துள்ள அழைப்புக்கு, ஆப்பிரிக்க நாடுகள் செவிசாய்க்க வேண்டும் என ஐநா பொதுச் செயலாளர் ஆண்டனியோ குட்ரரோஸ் வலியுறுத்தியுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.