ETV Bharat / state

3 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @3PM - etv bharat top ten news three pm

ஈடிவி பாரத்தின் பிற்பகல் 3 மணி செய்திச் சுருக்கம்

etv bharat top ten news three pm
etv bharat top ten news three pm
author img

By

Published : May 4, 2021, 5:26 PM IST

'1, 368 தபால் வாக்குகள் செல்லாது'- ராமநாதபுரம் தேர்தல் அலுவலர்கள் அறிவிப்பு!

ராமநாதபுரம்: 11ஆயிரத்து 651 தபால் வாக்குகளில் ஆயிரத்து 368 தபால் வாக்குகள் செல்லாதவை என தேர்தல் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

சொற்ப வித்தியாசத்தில் வெற்றியை ருசித்த வேட்பாளர்கள் பட்டியல்!

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் 1,000 வாக்குகளுக்கும் குறைவான வித்தியாசத்தில் 8 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.

’இது போன்ற செயல்களில் ஈடுபடாதீர்கள்’ - தொண்டர்களைக் கண்டித்த ஸ்டாலின்

திமுகவின் வெற்றிக்காக உடலை சிதைத்துக் கொள்ளக் கூடாது என்றும், துயரத்தை உண்டாக்கும் நிகழ்வுகளைச் செய்திடக்கூடாது எனவும் அக்கட்சி தலைவர் ஸ்டாலின் கண்டிப்புடன் கேட்டுக் கொண்டுள்ளார்.

விஜயகாந்திடம் வாழ்த்து பெற்ற உதயநிதி!

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி, தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்தை நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.

கரோனா தடுப்பு நடவடிக்கை - மு.க.ஸ்டாலின் ஆலோசனை

சென்னை: கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலாளர், சுகாதாரத்துறை செயலாளர் உள்ளிட்ட அலுவலர்களுடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார் .

தோல்வி எங்களுக்கு புதிதல்ல: முன்னாள் அமைச்சர் வளர்மதி

சேலம்: சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக தோல்வியை தழுவிய நிலையில், தோல்வி தங்களுக்கு புதிதல்ல என முன்னாள் அமைச்சர் வளர்மதி தெரிவித்துள்ளார்.

முகப்பேர் அம்மா உணவகத்தை சூறையாடிய திமுகவினர்

சென்னை: முகப்பேரில் அம்மா உணவகத்தை திமுகவினர் சூறையாடிய காணொலி சமூக வலைதளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடித்து நொறுக்கப்பட்ட அம்மா உணவகத்தை சீரமைத்த திமுக!

சென்னை: முகப்பேரில் திமுக தொண்டர்களால் அடித்து நொறுக்கப்பட்ட அம்மா உணவகம், திமுக கட்சியினரால் உடனடியாக சீரமைக்கப்பட்டுள்ளது.

அம்மா உணவகத்தை துவம்சம் செய்த திமுக: ஜெயக்குமார் கண்டனம்!

சென்னை: மதுரவாயல் பகுதியில் இயங்கி வரும் அம்மா உணவகத்தை துவம்சம் செய்த திமுகவினரைக் கண்டித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ட்வீட் செய்துள்ளார்.

வீரர்களை குறிவைக்கும் கரோனா....ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைப்பு!

பல வீரர்களுக்கு கரோனா பாதிப்பு உறுதியானதையடுத்து, நடுப்பு ஐபிஎல் தொடர் நிறுத்தப்படுவதாக பிசிசிஐ துணைதலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.