ETV Bharat / state

3 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @3PM

ஈடிவி பாரத்தின் பிற்பகல் 3 மணி செய்திச் சுருக்கம்

etv-bharat-top-ten-news-three-pm
etv-bharat-top-ten-news-three-pm
author img

By

Published : Apr 26, 2021, 3:32 PM IST

வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடுபவர்கள் தடுப்பூசி போட்டிருந்தால், பிசிஆர் சோதனை தேவையில்லை- சத்யபிரதா சாகு

சென்னை: வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் அலுவலர்கள், வேட்பாளர் முகவர்கள் தடுப்பூசி போட்டிருந்தால், பிசிஆர் சோதனை தேவையில்லை என தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

வாய்ப்புள்ள அனைத்து வகையிலும் ஆக்சிஜன் தாயரிக்க வேண்டும்- டிடிவி தினகரன்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தவிர வாய்ப்புள்ள அனைத்து வகையிலும் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

'தமிழ்நாடு அரசு பொறுப்பில் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யலாம்'

ஸ்டெர்லைட் ஆலையை, தமிழ்நாடு அரசு பொறுப்பில் எடுத்துக் கொண்டு அங்கு மக்களுக்குத் தேவையான ஆக்சிஜன் உற்பத்தியைச் செய்யலாம் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கருத்து தெரிவித்துள்ளார்.

விஷம் அருந்தி நகராட்சி ஊழியர் தற்கொலை!

வேலூர்: ஆற்காடு சாலையிலுள்ள விடுதியில் நகராட்சி ஊழியர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

குடிநீரின்றி தவிக்கும் பொதுமக்கள்: குழாய்க்கு மாலை அணிவித்து போராட்டம்!

திருவாரூர்: முத்துப்பேட்டை அருகே குழாயில் குடிதண்ணீர் வராததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், குழாய்க்கு மாலை அணிவித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அடிப்படை எழுத்தறிவுப் பாடங்கள்: கல்வித் தொலைக்காட்சியில் பாடம் கற்கலாம்

சென்னை: அடிப்படை எழுத்தறிவினை கற்றுத் தரும் வகையில் தினமும் மாலை 7 மணி முதல் 7.30 மணி வரையில் கல்வித் தொலைக்காட்சியில் பாடங்கள் நடத்தப்படவுள்ளன.

தேர்தல் ஆணையம் மீது கொலைக்குற்றம் சுமத்தினாலும் தவறில்லை - சென்னை உயர் நீதிமன்றம் காட்டம்

சென்னை: தமிழ்நாட்டின் தற்போதைய கரோனா பரவல் நிலைக்கு தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைதான் காரணம் எனச் சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

4 மாதங்கள் மட்டும் ஸ்டெர்லைட் ஆலை திறப்பு - தமிழ்நாடு அரசு

ஆக்சிஜன் தேவைக்காக ஸ்டெர்லைட் ஆலை நான்கு மாதங்கள் மட்டும் திறக்க தமிழ்நாடு அரசு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

வளி மண்டல சுழற்சி காரணமாக ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்யும்

சென்னை: வளி மண்டல சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஊரடங்கு: நிவாரணத் தொகை வழங்கக் கோரி நாட்டுப்புறக் கலைஞர்கள் ஆட்சியரிடம் மனு

மதுரை: கரோனா ஊரடங்கு கால நிவாரணத் தொகை வழங்கக் கோரி மரக்கால் ஆட்டக்கலைக் கலைஞர்கள் மரக்கால் ஆட்டம் நிகழ்த்தியவாறு மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.