ETV Bharat / state

மதியம் 3 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 3 PM

ஈடிவி பாரத்தின் மதியம் 3 மணி செய்திச் சுருக்கம்

etv bharat top ten news three pm
etv bharat top ten news three pm
author img

By

Published : Feb 19, 2021, 3:54 PM IST

திஷா ரவியின் தனியுரிமையைப் பாதுகாப்பது அவசியம் - டெல்லி உயர் நீதிமன்றம்

டெல்லி: சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் திஷா ரவியின் தனியுரிமையையும் கருத்துச் சுதந்திரத்தையும் பாதுகாப்பது அவசியமாகிறது என டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

'அடிக்கிற அடியில் சனாதான கட்சி தமிழ்நாட்டின் பக்கமே தலைவைத்து படுக்கக்கூடாது' - திருமாவளவன் தாக்கு!

மதுரை: வரும் தேர்தலில் அடிக்கிற அடியில் சனாதான கட்சி, தமிழ்நாட்டின் பக்கமே தலைவைத்து கூட படுக்கக்கூடாது என்றும், தேர்தலுக்குப் பின்பு அதிமுகவை பாஜக நிச்சயம் அழித்துவிடும் எனவும், விசிக தலைவர் தொல்.திருமாவளனவன் கடுமையாகச் சாடினார்.

இந்தியாவின் முதல் கைப்பை வங்கியைத் தொடங்கிய நகரம் எது தெரியுமா?

நகரம் முழுவதிலும் பருத்தித் துணிகளாலான கைப்பை வங்கிகளை நிறுவ குவாலியர் மாநகராட்சி நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. இதனால் நெகிழிப் பைகளின் பயன்பாடு குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

'இவை லாக்கப்தான்; ஆனால் அப்படி கிடையாது' - ராணிப்பேட்டை காவல் துறையின் புத்தாக்க முயற்சி

'போதிமரத்தால்தான் புத்தர் என்பது இல்லை. புத்தரால்தான் அது போதிமரம்' - ராணிப்பேட்டை காவல் துறை இதை நிரூபித்துக் காட்டியுள்ளது. குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் வாழ்க்கை அப்படியே முடிந்துவிடாமல் அவர்களுக்குள் ஒரு மாற்றத்தை அரங்கேற்றும்விதமாக சிறைகள் முழுவதும் சித்திரங்களால் அழகுப்படுத்தப்பட்டுள்ளன.

பெர்சவரன்ஸ் விண்கலத்தை வழிநடத்தும் இந்திய விஞ்ஞானி - நாட்டிற்கு பெருமை சேர்த்த சுவாதி மோகன்!

வாஷிங்டன்: இளம்வயதில் ஸ்டார் ட்ரெக் என்ற அனிமேஷன் சீரிஸை பார்த்து உத்வேகம் அடைந்த இந்திய-அமெரிக்க விஞ்ஞானியான சுவாதி மோகன், நாசா தயாரித்த விண்கலம் செவ்வாய் கிரகத்தில் தரையிறங்குவதில் முக்கிய பங்காற்றியுள்ளார்.

கேரளாவில் முக்கியத் திட்டங்களைத் திறந்துவைக்கும் பிரதமர் மோடி

கேரளாவில் மின்சாரம் மற்றும் நகர்ப்புறத் துறையின் முக்கியத் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி மூலம் திறந்துவைக்கிறார்.

முந்திரி எண்ணெய் தயாரிக்கும் ஆலையில் திடீர் தீ விபத்து!

கடலூர்: பண்ருட்டி அருகே தனியார் முந்திரி எண்ணெய் தயாரிக்கும் நிறுவனத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தை தீயணைப்புத் துறையினர் போராடி கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

பட்ஜெட்டிற்குப் பின் தொழில் துறையினரை சந்தித்த நிதி அமைச்சர்

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தொழில் துறையினருடன் கலந்துரையாடினார்.

அரசியல் ஸ்டன்ட்களில் திமுக ஈடுபடுகிறது - அமைச்சர் ஜெயக்குமார்

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் உள்ளிட்ட தலைவர்கள் தமிழ்நாடு அமைச்சர்களின் இரண்டாவது ஊழல் பட்டியலை தயாரித்து அதனை ஆளுநரிடம் அளிப்பது வெறும் அரசியல் ஸ்டண்ட் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார் .

கோவிஷீல்ட் தடுப்பூசி பாதுகாப்பானதல்ல என அறிவிக்கக் கோரிய வழக்கு: மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு!

சென்னை: கரோனாவை தடுக்க போடப்படும் கோவிஷீல்ட் தடுப்பூசி பாதுகாப்பானதல்ல என அறிவிக்கக் கோரிய வழக்கில், மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.