ETV Bharat / state

3 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 3 PM - etv bharat top ten news three pm

ஈடிவி பாரத்தின் 3 மணி செய்திச் சுருக்கம்

etv bharat top ten news three pm
etv bharat top ten news three pm
author img

By

Published : Feb 17, 2021, 3:06 PM IST

'சிபிஎஸ்இ பொதுத்தேர்வு அறிவிப்பைத் தொடர்ந்து பிளஸ் 2 பொதுத்தேர்வு அறிவிப்பு'

ஈரோடு: சிபிஎஸ்இ பள்ளிகளில் பொதுத்தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் தற்போது பிளஸ் 2 பொதுத்தேர்வு தேதி தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது எனப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

இன்னும் கோவிட்-19 ஓயவில்லை அதீத நம்பிக்கை ஆபத்தானது - எச்சரிக்கும் ராகுல்

கோவிட்-19 பெருந்தொற்று இன்னும் ஓயாத போதிலும், அரசு அலட்சியத்துடனும் அதீத நம்பிக்கையுடனும் செயல்படுகிறது எனக் காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.

புதுச்சேரியில் காங். அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் மனு!

புதுச்சேரி சட்டப்பேரவையில் ஆளும் காங்கிரஸ் கட்சி, எதிர்க்கட்சிக்கு (நியமன உறுப்பினர்கள் 3 பேர் உள்பட) உறுப்பினர்களின் எண்ணிக்கை சம பலத்துடன் இருப்பதால், பெரும்பான்மையை நிரூபிக்க, எதிர்க்கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்கள் துணைநிலை ஆளுநர் அலுவலகத்தில் கடிதம் அளித்தனர்.

மைசூரில் பயங்கரம்... பிச்சை எடுத்துக்கொண்டிருந்த பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்து கொன்ற கும்பல்!

பெங்களூரு: மைசூரில் பிச்சை எடுக்கும் பெண்ணை கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

'திஷா ரவியை தேசத்துரோக வழக்கில் கைதுசெய்வதா?' - வைகோ கண்டனம்

சூழலியல் ஆர்வலர் திஷா ரவி கைதுசெய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வு - பிப்.22 தமிழ்நாடு முழுவதும் திமுக போராட்டம்!

சென்னை: பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து பிப்ரவரி 22ஆம் தேதி அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று தேர்தல் பரப்புரையை தொடங்கிய முதலமைச்சர் பழனிசாமி

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி மாவட்டம் தோறும் தீவிர பரப்புரை மேற்கொண்டு வருகிறார். அதன்படி, தற்போது 6ஆவது கட்ட தேர்தல் பரப்புரையை இன்று (பிப்.17) தொடங்கியுள்ளார்.

கடலூர் என்கவுன்டர்: சம்பவ இடத்தில் காவல் துறை விசாரணை

கடலூர்: ரவுடியை வெட்டிக்கொன்று தலையைத் துண்டித்துச் சென்ற கொலையாளி பண்ருட்டி அருகே என்கவுன்டரில் உயிரிழந்த நிலையில் காவல் துறையினர் சம்பவ இடத்தில் விசாரணை நடத்திவருகின்றனர்.

தருமபுரியில் விவசாயக் கண்காட்சியை திறந்துவைத்த எம்எல்ஏ!

தருமபுரி: விவசாய கருவிகள் மற்றும் விதை கண்காட்சியை பாப்பிரெட்டிப்பட்டி சட்டப்பேரவை உறுப்பினர் கோவிந்தசாமி திறந்துவைத்தார்.

சாம்பல் புதன்: பாளையங்கோட்டை சவேரியார் தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனை

திருநெல்வேலி: கிறிஸ்தவர்களின் புனித தவக்காலமாக கருதப்படும் சாம்பல் புதனான இன்று (பிப். 17) பாளையங்கோட்டை சவேரியார் தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனையுடன் வழிபாடு தொடங்கியது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.