ETV Bharat / state

3 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 3 PM

ஈடிவி பாரத்தின் 3 மணி செய்திச் சுருக்கம், இதோ...

etv bharat top ten news three pm
etv bharat top ten news three pm
author img

By

Published : Feb 6, 2021, 3:46 PM IST

சசிகலாவிற்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும் - அதிமுக நிர்வாகி கடிதம்

தேனி: சசிகலாவிற்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனத் தமிழ்நாடு காவல் துறைக்கு தேனி மாவட்ட அதிமுக நிர்வாகி கடிதம் அனுப்பியுள்ளார்.

வேளாண் சட்டம் தொடர்பாக நாடாளுமன்ற விவாதத்திற்குத் தயாரான அரசு?

வேளாண் சட்டம் தொடர்பாக நாடாளுமன்ற விவாதத்திற்கு அரசு தயாராகியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சசிகலா பிப். 8இல் தமிழ்நாடு வருகை: இன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனை

சென்னை: சசிகலா நாளை மறுநாள் (பிப். 8) பெங்களூருவிலிருந்து தமிழ்நாடு வரவுள்ள நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர்கள், அமைச்சர்களுக்கு ஆலோசனைக் கூட்டம் இன்று மாலை நடைபெறவுள்ளது.

அரியர் மாணவர்களுக்கு பிப். 16 முதல் தேர்வு: அண்ணா பல்கலை. அறிவிப்பு

சென்னை: அரியர் மாணவர்களுக்கு வரும் 16ஆம் தேதிமுதல் தேர்வு நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கோவிட்-19 நிலவரம்: 20 கோடியைத் தாண்டிய பரிசோதனை, 52 லட்சம் பேருக்கு தடுப்பூசி!

இந்தியாவில் கரோனா பரிசோதனை எண்ணிக்கை 20 கோடியைத் தாண்டியது. மேலும் இதுவரை 52 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.

திருமண நிதியுதவித் திட்டத்திற்கு ரூ.726.31 கோடி... இதுமட்டுமல்ல இன்னும் இருக்கு! - தகவல் உள்ளே...

சென்னை: 2020-21ஆம் நிதியாண்டிற்கான திருமண நிதியுதவித் திட்டத்திற்கு 726 கோடியே 31 லட்சம் ரூபாய் ஒதுக்கீடுசெய்து, ஏழு பயனாளிகளுக்குத் தங்க நாணயம் வழங்கி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்ததோடு, மேலும் பல்வேறு சமூக நலத் திட்டங்களையும் தொடங்கிவைத்துள்ளார்.

சாலை வசதி இல்லை: இறந்தவரின் உடலை 2 கிமீ தூரம் சுமந்துசென்ற கிராமத்தினர்!

திண்டுக்கல்: கொடைக்கானல் அருகே சாலை வசதி இல்லாததால் இரண்டு கிலோ மீட்டர் தொலைவிற்கு இறந்தவரின் உடலை கிராம மக்கள் சுமந்து சென்றுள்ளனர்.

விவசாயிகள் 'சக்கா ஜாம்' முற்றுகை - உஷார்நிலையில் காவல் துறை

வேளாண் சட்டங்களுக்கு எதிராக சக்கா ஜாம் போராட்டத்தை விவசாயிகள் அறிவித்துள்ளதால், டெல்லியில் காவல் துறை உஷார்நிலையில் உள்ளது.

திமுக ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் டீசல் விலை கட்டுப்படுத்தப்படும் - மு.க. ஸ்டாலின்

தூத்துக்குடி: திமுக ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் டீசல் விலை கட்டுப்படுத்தப்படும் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வாக்குறுதி அளித்துள்ளார்.

ரமலான் திருநாளில் சிபிஎஸ்இ தேர்வுகளா? - தேதியை மாற்றக்கோரி சு. வெங்கடேசன் எம்பி கடிதம்

மதுரை: ரமலான் திருநாளில் சிபிஎஸ்இ தேர்வுகள் நடைபெறும் சூழல் எழுந்திருப்பதை சுட்டிக்காட்டி தேர்வுத் தேதிகளை மாற்றுமாறு மத்திய கல்வித் துறை அமைச்சருக்கும், சிபிஎஸ்இ (மத்திய இடைநிலைக் கல்வி வாரியம்) இயக்குநருக்கும் சு. வெங்கடேசன் எம்பி கடிதம் எழுதியுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.