ETV Bharat / state

7 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 7PM - etv bharat top ten news seven pm

ஈ டிவி பாரத்தின் இரவு 7 மணி செய்திச் சுருக்கம் இதோ.

7 மணி செய்திச் சுருக்கம் T
7 மணி செய்திச் சுருக்கம் T
author img

By

Published : May 22, 2021, 7:19 PM IST

டாஸ்மாக் கடைகள் செயல்பட அனுமதியில்லை!

சென்னை: தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் அனைத்து கடைகளும் செயல்பட அனுமதி வழங்கப்பட்டாலும் டாஸ்மாக் கடைகள் செயல்பட அனுமதி வழங்கப்படவில்லை.

இன்றும், நாளையும் 4,500 பேருந்துகள் இயக்கம்

சென்னை: கரோனா தொற்று பாதிப்பு கட்டுக்குள் வராத நிலையில், மேலும் ஒரு வாரத்திற்கு தளர்வுகள் அற்ற ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

மேலும் ஒரு வார காலத்திற்கு ஊரடங்கு: இதற்கெல்லாம் அனுமதி இல்லை

கரோனா தொற்றுப் பரவல் காரணமாக தமிழ்நாட்டில் எந்தவித தளர்வுகளும் இல்லாத முழு ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் ஊரடங்கை மீறி நடமாடினால் தக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

'அந்த 2,000 ரூபா எனக்கு வேண்டாம்' - ரேஷன் கடையில் சொல்லிவிட்டுச் சென்ற விவசாயிக்கு ஷாக்!

பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு தான் கரோனா நிவாரண நிதி என்று நிதியை விட்டுகொடுத்த விவசாயிக்கு, ரேஷன் கடையில் இருந்து வந்த குறுஞ்செய்தி பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

கரோனாவிலிருந்து தப்பிக்க வயல்வெளிக்குள் தஞ்சம் புகுந்த கிராமவாசிகள்!

கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கரோனா பரவல் அச்சம் காரணமாக மக்கள் வயல்வெளிகளில் வசித்துவருகின்றனர்.

தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து ஐஏஎஸ் அலுவலர்கள் தலைமையில் ஒருங்கிணைப்புக் குழு!

கரோனா ஒழிப்பு நடவடிக்கைகளில் அரசுடன் தொண்டு நிறுவனங்களை ஒன்றிணைப்பதற்காக, ஐ.ஏ.எஸ். அலுவலர்களைக் கொண்ட மாநில அளவிலான ஒருங்கிணைப்புக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

அரசு மருத்துவமனைக்கு உதவ இரண்டு நாட்களில் ரூ. 1கோடி நிதி திரட்டிய அமெரிக்க வாழ் தமிழர்

அமெரிக்காவில் வசிக்கும் கோயம்புத்தூரைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் 48 மணி நேரத்தில் ரூ.1 கோடி நிதி திரட்டி, கோயம்புத்தூர் அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் கட்டமைப்புகளை ஏற்படுத்தித் தந்துள்ளார். இவரது முயற்சியை பலரும் பாராட்டியுள்ளனர்.

பாலக்கோடு பகுதியில் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பி அன்பழகன் ஆய்வு

தர்மபுரி: பாலக்கோடு சட்டப்பேரவை உறுப்பினர் கே.பி அன்பழகன் பாலக்கோடு பகுதியில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

ராமேஸ்வரம் அருகே சாக்கு மூட்டையில் கிடந்த கஞ்சா பொட்டலங்கள்

ராமேஸ்வரம் அருகே கரை ஒதுங்கிய சாக்கு மூட்டையில் கிடந்த 34 கிலோ கஞ்சாவை கைப்பற்றிய காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தியாவில் ஆகஸ்ட் மாதம் தொடங்கும் ஸ்புட்னிக் தடுப்பூசி தயாரிப்பு!

வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் இந்தியாவில் ஸ்புட்னிக் தடுப்பூசி தயாரிப்பு தொடங்கி நடைபெறும் என ரஷ்யாவுக்கான இந்தியத் தூதர் தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.