புதுச்சேரியில் ரங்கசாமி முதலமைச்சராக பாஜக ஆதரவு
ஆதரவு எம்எல்ஏக்களுடன் துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜனை சந்தித்தார் ரங்கசாமி. அவருக்கு பாஜக எம்எல்ஏ.க்களும் ஆதரவு அளித்துள்ளனர்.
அரவக்குறிச்சி! அண்ணாமலை தோல்வி
முன்னாள் ஐபிஎஸ் அலுவலரும், அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளருமான அண்ணாமலை 24,816 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் இளங்கோவிடம் தோல்வி அடைந்தார்.
விராலிமலையில் விஜயம் பெற்ற சி.விஜயபாஸ்கர்!
அதிமுக அமைச்சரவையில், சுகாதாரத்துறை அமைச்சராகவிருந்த சி.விஜயபாஸ்கர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் பழனியப்பனை 23 ஆயிரத்து 598 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
அரவக்குறிச்சியில் இருந்து கரூர் - செந்தில் பாலாஜி வெற்றி
சட்டப்பேரவை தேர்தலில் கரூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட செந்தில் பாலாஜி, தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளரான எம்.ஆர். விஜயபாஸ்கரை சுமார் 12,448 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார்.
4 ஆயிரம் ஆக்ஸிஜன் டேங்கர்களை ஏற்றி வந்த ஸ்பைஸ்ஜெட் விமானம்!
வெளிநாடுகளிலிருந்து இந்தியாவிற்கு 4 ஆயிரத்து 400 ஆக்ஸிஜன் டேங்கர்களை ஸ்பைஸ்ஜெட் விமானம் மூலம் கொண்டுவரப்பட்டுள்ளன என்று ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சிவசேனாபதிக்கு அதிர்ச்சி தோல்வியளித்த எஸ்.பி.வேலுமணி!
கோயம்புத்தூர் மாவட்டம் தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிட்ட எஸ்.பி.வேலுமணி, தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதியை 41,630 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடர்ச்சியாக ஐந்தாவது முறை எம்.எல்.ஏவாக சட்டப்பேரவைக்குள் நுழைகிறார்.
தேர்தல் 2021- அதிமுக படுதோல்வி: தலைமைச் செயலக அறைகளை காலி செய்யும் அமைச்சர்கள்!
சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக படுதோல்வியடைந்ததை அடுத்து தலைமைச் செயலகத்திலுள்ள அமைச்சர்களின் அறைகள் காலி செய்யபட்டு வருகிறது.
எல்.முருகன் பெற்ற வாக்கு எத்தனை? திருப்பூர் தேர்தல் விவரங்கள்!
திருப்பூர்: தாராபுரத்தில் போட்டியிட்ட பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தோல்வியடைந்தார். மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளில், 5 தொகுதிகளை அதிமுகவும், 3 தொகுதிகளை திமுகவும் கைப்பற்றியுள்ளது.
’பாஜக வெற்றி தமிழக அரசியலில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது’ - திருமாவளவன் பேட்டி!
பாஜக வெற்றி தமிழக அரசியலில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
தொடரும் மரணங்கள்... ஹவுஸ் புல் போர்டு போட்ட தகன மையம்!
பெங்களூரு: சாம்ராஜ்பேட்டை டி.ஆர் மில் தகன மையத்தில், ஹவுஸ் புல் போர்டு போட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.