ETV Bharat / state

7 மணி செய்திச்சுருக்கம் Top 10 news @ 7 PM - etv bharat top ten news seven pm

ஈடிவி பாரத்தின் 7 மணி செய்திச்சுருக்கம்.

etv bharat top ten news seven pm
etv bharat top ten news seven pm
author img

By

Published : Feb 23, 2021, 7:16 PM IST

செல்போன் தரமறுத்த தாய்: 6ஆம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை!

தூத்துக்குடி: கோவில்பட்டி அருகே தாய் செல்போன் தரமறுத்ததால் விரக்தியடைந்த 6ஆம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்ததற்கு பாஜக காரணம் இல்லை: எல்.முருகன்

கன்னியாகுமரி: புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்ததற்கு பாஜக காரணம் இல்லை என தமிழ்நாடு பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

பாரம்பரிய நெல் ரகங்களுக்கான நெல்.ஜெயராமன் மையம்

பாரம்பரிய விதை நெல்களை காக்கும் பணியில் தன்னை அர்ப்பணித்த விவசாயி நெல்.ஜெயராமனை கௌரவிக்கும் வகையில், பாரம்பரிய நெல் ரகங்களுக்கான நெல்.ஜெயராமன் மையம் 47.87 லட்சம் ரூபாய் செலவில் நீடாமங்கலத்தில் அமைக்கப்படுகிறது என்று இடைக்கால பட்ஜெட் அறிக்கையில் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

மனித உரிமை ஆணைய தலைவர் நியமனம் குறித்து வழக்கு: தமிழ்நாடு அரசு விளக்கமளிக்க உத்தரவு!

சென்னை: தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணைய தலைவர் நியமனத்தில் பின்பற்றிய நடைமுறை குறித்து தமிழ்நாடு அரசு விளக்கமளிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கலைமாமணி விருதுக்கு நிபுணர் குழு அமைக்கக் கோரிய வழக்கு ஒத்திவைப்பு

மதுரை: கலைமாமணி விருதுகள் வழங்குவது தொடர்பாக நிபுணர் குழுவை அமைக்கக் கோரி வழக்கில், தமிழ்நாடு கலை மற்றும் கலாச்சாரத்துறை இயக்குநர், தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்ற உறுப்பினர் - செயலர் பதிலளிக்க உத்தரவிட்டு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை வழக்கை ஒத்திவைத்தது.

கொலையில் முடிந்த நிலத்தகராறு விவகாரம்

கள்ளக்குறிச்சி: நிலத்தகராறு காரணமாக ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்தது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இளைஞர் கொலை வழக்கில் புதிய திருப்பம் : காவல் துறை விசாரணை!

ஈரோடு: சத்தியமங்கலம் அருகே சில தினங்களுக்கு முன் நடைபெற்ற இளைஞர் கொலை வழக்கில், இளைஞரின் அடையாளம் காணப்பட்டு அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

டூல்கிட் வழக்கு: திஷா ரவிக்கு பிணை!

டெல்லி: டூல்கிட் வழக்கில் சுற்றுச்சூழல் ஆர்வலர் திஷா ரவிக்கு டெல்லி அமர்வு நீதிமன்றம் பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளது.

ஐந்து மாநில தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் எப்போது வெளியிடும்?

டெல்லி: ஐந்து மாநில தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் மார்ச் முதல் வாரத்தில் வெளியிட வாய்ப்புள்ளதாக பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

கங்காதேவி: யோகி பாபுவின் ஹாரர் திரைப்படம்

யோகி பாபு முக்கிய வேடத்தில் நடிக்கும் காமெடி, த்ரில்லர் கலந்த ஹாரர் திரைப்படமாக 'கங்காதேவி' என்ற திரைப்படம் உருவாகிவருகிறது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.