ETV Bharat / state

மதியம் 1 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @1pm

author img

By

Published : Mar 16, 2021, 1:21 PM IST

ஈடிவி பாரத்தின் மதியம் 1 மணி செய்திச் சுருக்கம் இதோ...

மதியம் 1 மணி செய்திச் சுருக்கம்
மதியம் 1 மணி செய்திச் சுருக்கம்

சென்னையில் இன்று 16 விமானங்கள் ரத்து

பயணிகள் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்ததன் காரணமாக இன்று ஒரே நாளில் சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்படும் 16 உள்நாட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

போராடும் வங்கி ஊழியர்களுக்கு ஆதரவளிக்கும் ராகுல் காந்தி

பொதுத்துறை வங்கி ஊழியர்களின் போராட்டத்திற்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆதரவு தெரிவித்துள்ளார்.

திமுக தொண்டரின் மண்டையில் உதித்த உதயசூரியன்

திருச்செங்கோடு தொகுதியில் திமுக தொண்டர் கோபிநாத் என்பவர் தனது தலையில் அக்கட்சியின் சின்னத்தை வரைந்து நூதன முறையில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளார். அவர் தன் தலையின் பின்பகுதியில் உதய சூரியன் போன்றும் வலது பக்கத்தில் DMK என ஆங்கிலத்தில் எழுதியும் இடது பக்கத்தில் திமுக கொடி போன்றும் முடி திருத்தம் செய்து வாக்கு சேகரித்து வருவது மற்ற கட்சியினரை வெகுவாக ஈர்த்துள்ளது.

சிசிடிவி காட்சி: கடலூர் துறைமுகப் பகுதியில் மாமியார், மனைவி படுகொலை

கடலூர்: துறைமுகப் பகுதியில் மாமியார், மனைவியைக் கத்தியால் குத்திப் படுகொலை செய்த நபரைக் அடையாளம் காண காவல் துறையினர் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள காட்சியை வெளியிட்டுள்ளனர். நடுரோட்டில் பொதுமக்கள் வாகனங்களில் செல்லும்போது கத்தியால் அந்நபர் குத்தும் இக்காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரோனா தடுப்பூசிக்கு பயமா...இத படிச்சிட்டு போங்க!

உலகின் மிகப்பெரிய நோய்த்தடுப்பு திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில் நாம் நுழைந்திருக்கிறோம். அவற்றை எதிர்கொள்ள கரோனா தடுப்பூசியே மிகச்சிறந்த ஆயுதமாகும். இதன் மூலமாகவே நாம் நம்முடைய இயல்பு நிலைக்குத் திரும்ப முடியும். கரோனா தொற்றுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்க முதல் நாளிலிருந்தே முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். நம்முடைய இலக்கை நோக்கி மெதுவாக நகர்ந்தாலும் சீராக நகர்ந்து கொண்டிருக்கிறோம்.

கூட்டணி கட்சிக்குப் போன தொகுதி: கண்கலங்கிய அமைச்சர்!

புதுச்சேரி: வில்லியனூர் தொகுதி கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்பட்டதாலும், தனிப்பட்ட காரணங்களாலும், வேறு தொகுதியில் போட்டியிட உள்ளதாக முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம், ஆதரவாளர் மத்தியில் கண்கலங்கினார்.

மாட்டு வண்டியில் வந்து வேட்புமனு தாக்கல் செய்த நாம்தமிழர் கட்சி வேட்பாளர்

ராமநாதபுரம்: பரமக்குடி (தனி) சட்டப்பேரவைத் தொகுதியின் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சசிகலா, மாட்டு வண்டியில் வந்து வேட்புமனு தாக்கல் செய்தார். பின்னர், பரமக்குடி, ஒட்டப்பாலம் உள்ளிட்ட முக்கியமான பகுதிகளில் மாட்டு வண்டியில் சென்று பிரச்சாரம் செய்தார்.

அதிமுக தேர்தல் அறிக்கையும், ரஜினியும் : அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

திரைத்துறையில், ரஜினி வில்லான வந்து ஹீரோவாக மாறியது போல், அதிமுக தேர்தல் அறிக்கை உள்ளதாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் மீண்டும் ஊரடங்கு? தலைமைச் செயலாளர் அவசர ஆலோசனை

சென்னை: தமிழ்நாடு தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், கரோனா தடுப்பு நடவடிக்கை செயல்பாடுகள் குறித்து, அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

இதோ வந்துடுச்சு வலிமை அப்டேட்!

அஜித்தின் வலிமை படம் குறித்த மற்றொரு மாஸான அப்டேட் வெளியாகியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.