ஸ்டெர்லைட்டுக்கு எதிரான ஆர்ப்பாட்டம்: 11 பேர் கைது
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, 11 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
மதுரை விமான நிலையத்தை மேம்படுத்தக் கோரிய வழக்கு ஒத்திவைப்பு
மதுரை விமான நிலையத்தை பன்னாட்டு விமான நிலையமாக அறிவித்து, வசதிகளை மேம்படுத்தக் கோரிய வழக்கில், மத்திய விமான போக்குவரத்துத் துறை பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
தி.மலை அருகே மனைவியைக் கொன்று தற்கொலை செய்துகொண்ட கணவன்
திருவண்ணாமலை: செய்யாறு அருகே மது குடிக்க பணம் தராததால், மனைவியை எரித்துக் கொலைசெய்து, கணவனும் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலத்தில் விதிமுறைகளை மீறி மாணவர்களுக்குத் தேர்வு நடத்த முயன்ற பள்ளி!
சேலம்: தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள விதிமுறைகளை மீறி அரசு உதவி பெறும் பள்ளியின் நிர்வாகம் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடத்த முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வாக்கு எண்ணிக்கைக்கு முதல் நாள் முழு ஊரடங்கை அமல்படுத்தலாம்' - அரசுக்கு உயர் நீதிமன்றம் ஆலோசனை!
கரோனா தொற்றின் 2ஆவது அலை பரவலை தடுக்கும் வகையில், வாக்கு எண்ணிக்கைக்கு முதல் நாள் (மே.1) ஊரடங்கை அமல்படுத்தலாம் என, தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஆலோசனை வழங்கியுள்ளது.
`கரோனா கட்டுப்பாடுகளுடன் கடையை திறக்க அனுமதிக்க வேண்டும்`- முடிதிருத்தும் தொழிலாளர் நல சங்கம்!
கரூர்: கரோனா கட்டுப்பாடுகளுடன் அழகு நிலையங்கள் செயல்பட தமிழ்நாடு அரசு உத்தரவளிக்க கோரி தமிழ்நாடு மருத்துவர் சமூக நல சங்கம் மற்றும் முடிதிருத்தும் தொழிலாளர் நல சங்கம் சார்பில் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
சிஎம்டிஏ.வில் கிடப்பில் போடப்பட்ட 5 ஆயிரம் விண்ணப்பங்கள்: கரோனா காரணம்?
சென்னை: கரோனா பெருந்தொற்று, சட்டப்பேரவைத் தேர்தல் ஆகியவற்றால் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்திடம் (சிஎம்டிஏ) பொது மக்கள் வீடு கட்ட அனுமதி கோரிய, சுமார் 5ஆயிரம் விண்ணங்கள் பரிசீலனை செய்து அனுமதி வழங்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது.
கணவர் இறந்த துக்கத்தில் மனைவி தற்கொலை!
சென்னை: தாம்பரம் அருகே கணவர் இறந்த துக்கத்தில் மனைவி தனது மகன், மகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டார்.
வள்ளல் அதியமான் திருவுருவ சிலைக்கு மரியாதை!
தருமபுரி: சித்ரா பௌர்ணமி நாளான இன்று அதியமான் கோட்டத்திலுள்ள வள்ளல் அதியமான் திருவுருவ சிலைக்கு மாவட்ட ஆட்சியர் கார்த்திகா மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
கேரளாவில் இன்று ஒரே நாளில் 21,890 பேருக்கு கரோனா உறுதி!
திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் இன்று(ஏப்.26) ஒரே நாளில் 21 ஆயிரத்து 890 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.