ஆறு ஆண்டுகளாக காவல்துறைக்கு டிமிக்கி கொடுத்த நபர் கைது!
சென்னை: கிழக்கு தாம்பரத்தில் ஆறு ஆண்டுகளாக காவல்துறையினர் பிடியில் சிக்காமல் இருந்துவந்த முக்கிய நபரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
'ஆரிய-திராவிடப் போரை முன்னின்று நடத்துவோம்' ஆ.ராசா சூளுரை!
சென்னை: ஆரிய திராவிடப் போர் நாடு முழுவதும் நடக்கும் என்றும், அதனை திமுக முன்னின்று நடத்தும் என்றும் நீலகிரி மக்களவை உறுப்பினர் ஆ.ராசா தெரிவித்தார்.
இரும்பு வேலியில் சிக்கி கடமான் இறப்பு!
தேனி: கம்பத்தில் வனப் பகுதியிலிருந்து வெளியேறி ஊருக்குள் புகுந்த ஆண் கடமான் ஒன்று இரும்பு வேலியில் சிக்கி உயிரிழந்தது.
ஜனநாயகப் படுகொலை செய்யும் பாஜக - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டனம்
புதுச்சேரியில் பாஜக அரசியல் ஜனநாயகப் படுகொலை செய்வது கண்டனத்திற்குரியது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் பாலகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார்.
திமுக நடத்தும் கடைசி போராட்டம் இதுதான்! - ஆர்.எஸ்.பாரதி
சென்னை: பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து நடத்தப்படும் போராட்டம்தான் எதிர்க்கட்சியாக திமுக நடத்தும் கடைசி போராட்டம் என கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி தெரிவித்துள்ளார்.
லஞ்ச ஒழிப்புத்துறையிடம் மீன்வளத்துறை அமைச்சருக்கு எதிராக திமுக முன்னாள் எம்எல்ஏ புகார்!
திருநெல்வேலி மாவட்டம், ராசிபுரம் தொகுதியின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் அப்பாவு, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் மீது நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக, சென்னை ஆலந்தூரில் உள்ள தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை தலைமை இயக்குநரிடம் புகார் அளித்தார்.
இருசக்கர வாகனத்துடன் மழைநீரில் அடித்துச் செல்லப்பட்ட பெண்!
புதுச்சேரி: நேற்று அதிகாலை பெய்த கனமழையால், வெள்ளவாரி வாய்காலில் ஏற்பட்ட வெள்ளத்தால், பெண் ஒருவர் இருச்சக்கர வாகனத்துடன் அடித்துச் செல்லப்பட்டார். அவரது உடலை தீயணைப்பு துறையினர் தேடி வருகின்றனர்.
கேரள எல்லைக்கு பூட்டுப்போட்ட கர்நாடக அரசு!
கர்நாடக மாநில தட்சின கன்னடா - கேரளா எல்லை வழிச்சாலை காலை முதல் மூடப்பட்டது. 72 மணி நேரத்துக்கு முன் கரோனா இல்லை என பரிசோதனை முடிவுச் சான்றிதழ் உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என கர்நாடக அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
பெரும் இழப்பை சந்தித்த இந்திய பங்குச் சந்தை!
இன்றைய வர்த்தக நாளில் மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,145 புள்ளிகள் குறைந்து 49,744ஆக இருந்தது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 306 புள்ளிகளை இழந்து 14,675ஆக இருந்தது.
உ.பி.யில் தொடரும் வன்முறைச் சம்பவங்கள் - இளம் பெண் மீது திராவகம் வீச்சு!
ஹபூர் மாவட்டத்தில் இளம்பெண் மீது ஒருவர் திராவகம் வீசியுள்ளார். பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் குறித்துக் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, குற்றவாளியைத் தேடி வருகின்றனர்.