ETV Bharat / state

ஈடிவி பாரத்தின் 9 மணி செய்திகள் Top 10 news @9am - etv bharat top ten news

ஈடிவி பாரத்தின் இரவு 9 மணி செய்திச் சுருக்கம் இதோ...

etv bharat top ten news nine pm
etv bharat top ten news nine pm
author img

By

Published : Feb 18, 2021, 9:21 PM IST

தனியார் வசம் செல்லும் சரக்கு ரயில் பாதை!

சரக்கு வழித்தடங்கள் (டி.எஃப்.சி) கட்டுமானத்தில் பில்ட்-ஆபரேட்-டிரான்ஸ்ஃபர் மாதிரியை அறிமுகப்படுத்த இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது. நாட்டிலேயே முதல் முறையாக தனியார் துறைக்கு ரயில்வே இந்த கட்டுமான வேலைகளுக்கு அனுமதியளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சாதனையின் வயது 88 - கிராம தலைவரான மூதாட்டி!

பெங்களூரு: சாதனைக்கு வயது ஒன்றும் தடையில்லை. தனது 88 வயதில் அப்படியோரு சாதனையை நிகழ்த்தியுள்ளார் தட்சிணையம்மா.

சிறுவனை பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்த வடமாநில இளைஞருக்கு தூக்கு!

புதுக்கோட்டை: மனவளர்ச்சி குன்றிய வாய்பேசமுடியாத சிறுவனை கடத்திச் சென்று பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கி கொலை செய்த வடமாநில இளைஞருக்கு மரண தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர் தற்கொலை

பெரம்பலூர்: இலங்கை அகதி ஒருவர் நண்பர் வீட்டில் தங்கியபோது தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமைச்சர் தங்கமணி தொகுதியில் திட்டப்பணிகளுக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு

சென்னை: ஊரகப் பகுதி முன்னுரிமை திட்ட நிதியத்தின் கீழ், அமைச்சர் தங்கமணியின் குமாரபாளையம் தொகுதியில் மேற்கொள்ளப்படும் 237 பணிகளுக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

' வழக்கம்போல் உள்நாட்டு விமான முனையம் செயல்படும்' தலைமை செயலாளா் அறிவிப்பு!

சென்னை: தமிழ்நாட்டிலுள்ள விமான நிலையங்களில் உள்நாட்டு விமானங்கள் இயக்க விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்பட்டுள்ளதாக, தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளா் அறிவித்துள்ளார்.

'தேசத்தின் எதிரியான திமுக ஆட்சிக்கு வரக்கூடாது' எல்.முருகன்

சென்னை: தேசத்தின் எதிரியான திமுக ஆட்சிக்கு வரக்கூடாது என்பதே நம் நோக்கம் என்றும், பாஜகவினர் போர் வீரர்களாக செயல்பட வேண்டும் என, மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

'வரும் தேர்தலில் குடும்பக் கட்சியை தமிழ்நாட்டு மக்கள் புறக்கணிப்பார்கள்' கிஷன் ரெட்டி!

சென்னை: தமிழ்நாட்டில் வரும் தேர்தலில் குடும்பக் கட்சியைத் தமிழ்நாட்டு மக்கள் புறக்கணிப்பார்கள் என,பாஜக தமிழ்நாடு தேர்தல் பொறுப்பாளரும், மத்திய இணை அமைச்சருமான கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

மதுரை எய்ம்ஸ்க்கு நிதி ஒதுக்க மத்திய அரசுக்கு மனமில்லை - மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு

தமிழ்நாட்டின் எய்ம்ஸ்க்கு மத்திய அரசு ஒதுக்கி உள்ள தொகை வெறும் 12 கோடி ரூபாய். ஆனால் மத்திய பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட பல மாநிலங்களில் எய்ம்ஸ்க்கு நூற்றுகணக்கான கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என திமுக தலைவர் மு.க ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.

வாணியம்பாடியில் மகளிர் காவல் நிலையங்களில் குழந்தைகளுக்கான மனமகிழ் கூடம்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் உள்ள மகளிர் காவல்நிலையங்களுக்கு வரும் பெண்கள் அவர் தம் குழந்தைகளுடன் வரும் சூழல் இருப்பதால் அவர்களின் குழந்தைகளுக்காக மனமகிழ் கூடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த மனமகிழ் கூடத்தை மாவடட் காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் திறந்துவைத்தார். இந்நிகழ்வில் காவல் ஆய்வாளர்கள், மாவட்ட குழந்தைகள் நிறுவனங்களைச் சார்ந்த தனி அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.